Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹோட்டல் ரூமில் ராதிகாவை பார்த்து மூர்த்தி அதிர்ச்சி.. பதிலடி கொடுத்த கோபி – இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 13-10-22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. தற்போது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உடன் இணைந்து மெகா சங்கமாக ஒரு மணி நேரம் எபிசொட் ஆக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய எபிசோடில் எல்லோரும் வெளியில் செல்வதற்காக காத்திருக்க அப்போது கோபியின் ராதிகாவும் பின் பக்கத்தில் வர ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் சென்று விடுகின்றனர். அதன் பிறகு கண்ணன் தனக்கு தலை வலிக்கிறது என ரூமிலேயே படுத்து தூங்க மற்றவர்கள் எல்லோரும் வெளியே சென்று ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பாக்கியா தனத்திடம் முல்லை உண்டாகி இருக்காளா என கேட்க இல்லை சும்மாதான் இருக்கா என சொல்ல பிறகு கதிர் தற்போது தங்களுடன் இல்லை என்ற விஷயத்தை கூறுகிறார். இந்த பக்கம் மீனா ஜீவா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டு மீனா சினிமாவுக்கு போகலாம் என சொல்ல ஜீவா கடையில் ஆள் இல்லை நாளைக்கு போகலாம் என கூறுகிறான்.

பிறகு மூர்த்தி கோபி மச்சானுக்கு போன போடலாம் என போன் போட கோபி ஃபோனை எடுக்கவில்லை அனைவரும் என்ன நடக்கும் என்று பதற்றத்தில் இருக்க போனை எடுக்காததால் நிம்மதி அடைகின்றனர். அடுத்து கண்ணன் தூக்கத்திலிருந்து எழுந்து வெளியே வர கோபியை பார்த்து ஓடிப் போய் முத்தம் கொடுத்து மாம்ஸ் நீங்க என்ன இங்க? சர்ப்ரைஸ் கொடுக்க வந்தீங்களா என கேட்க கோபி அதிர்ச்சி அடைகிறான்.

அடுத்து பெட்ரூமுக்குள் போய் உட்கார்ந்து கண்ணன் அராஜகம் செய்ய அப்போது ராதிகாவை பார்த்து எங்க அக்காவுக்கு துரோகம் பண்றீங்களா உங்களை சும்மா விடமாட்டேன் என சத்தம் போட்டு விட்டு ஓடிச் சென்று பாக்யாவை கட்டிப்பிடித்து உங்களுக்கு இப்படி நடந்துருச்சு என அழுகிறான். பிறகு நீங்க வாங்க என சொல்லி அண்ணனை அழைத்துக் கொண்டு வர எழில் கண்ணனை தடுக்க முயற்சி செய்ய அவன் கேட்காமல் மூர்த்தியை அழைத்துக் கொண்டு ஓடி வருகிறான்.

இந்த பக்கம் ராதிகா நடந்த விஷயத்தால் கடும் கோபமாக இருக்க கோபி சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்க அப்போது கண்ணன் வந்து கதவை வேக வேகமாக தட்ட கோபி கதவை திறக்கிறார். மூர்த்தி என்ன மச்சான் நீங்க இங்க இருக்கீங்க என்ன கேட்க கோபி எல்லாம் உன் வேலை தானே என எழிலை திட்டுகிறார்.

பிறகு கண்ணன் உள்ள வந்து பாருங்க யார் இருக்காங்கன்னு தெரியும் என உள்ளே அழைத்து வர ராதிகாவை பார்த்து மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். நான் அவ்வளவு சொல்லியும் நீங்க திருந்தல ரெண்டு பேர் கிட்டயும் பார்த்து பேசிட்டு தானே வந்தேன். இப்படி கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு இன்னொருத்தே கூட்டிட்டு வந்து லாட்ஜில் ரூம் போட்டு தங்க உங்களுக்கு அசிங்கமா இல்லையா என மூர்த்தி கேட்க கோபி கோபமாகி யாரு அடுத்தவங்க இவ என்னோட பொண்டாட்டி, நான் தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டி என சொல்லி ராதிகாவின் கழுத்தில் இருந்து தாலியை எடுத்துக்காட்டுகிறார். இதனால் மூர்த்தி கண்ணன் என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

baakiyalakshmi serial episode update 13-10-22
baakiyalakshmi serial episode update 13-10-22