Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்துவேல் கொடுத்த ஷாக்.பாக்கியா சொன்ன வார்த்தை.இன்றைய பாக்கியலட்சுமி ,பாண்டியன் ஸ்டோர் எபிசோட்

baakiyalakshmi serial episode update 14-02-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த சீரியல்களின் இன்றைய மெகா சங்கமம் எபிசோடில் கதிர் மற்றும் ராஜி திருமண கோலத்தில் வந்து நிற்க எல்லோரும் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்கள்.

குமாரு இவன் ஏமாத்தி தான் கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணி இருப்பான் என்று சொல்ல கதிர் நான் உன் தங்கச்சியை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனேனா என்று அவகிட்டயே கேளு என பதிலடி கொடுக்கிறார். சக்திவேல் அப்போ இதுக்கெல்லாம் நீ தான் காரணமா? உன்ன கொல்லாம விடமாட்டேன் என்று அருவாளை எடுத்து வர எல்லோரும் தடுத்து நிறுத்துகின்றனர்.

பாண்டியன் தங்களது குடும்பத்தை பிளான் போட்டு தான் இப்படி செய்ததாக குற்றம் சாட்ட கதிர் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு கை கூப்பி நிற்க கேட்கிறார்களா நகை, பணம் எல்லாம் எங்கே என்று பளார் பளார் என அறைய கதிர் மீண்டும் செலவாகி விட்டது என்று சொல்கிறார்.

அதன் பிறகு சக்திவேல் போலீசில் கம்பளைண்ட் கொடுத்து இவன ஜெயில்ல தள்ளலாம் என்று முடிவெடுத்து கிளம்ப அப்பத்தா போதும் நிறுத்துங்க என படுக்க நிறுத்துகிறார். அவ யாருடா கல்யாணம் பண்ணிக்கிட்டா சொந்த அத்தை பையன் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து இருக்கா என்னதான் அணை போட்டு நிறுத்தினாலும் ஆறு கடலில் போய் சேர தானே செய்யும். இவ்வளவு நேரமா நம்ம பொண்ணு எங்க போனான்னு தெரியாம தானே பதறிக்கிட்டு இருந்தோம் இப்ப என்ன வந்ததும் நகை பத்தி பேசுங்க அதெல்லாம் யாருக்காக சேர்த்து வைத்தது அவளுக்காக தானே விட்டுடுங்க என்று கூறுகிறார்.

முத்துவேல் எல்லாத்தையும் மறந்துடும் ஆனால் நீ அவன் கட்டின தாலியை கழட்டி எறிஞ்சிட்டு என் பொண்ண இந்த வீட்டுக்குள்ள வா என்று கூப்பிட ராஜி பதில் சொல்லாமல் இருக்க சக்திவேல் குமார் என எல்லோரும் தாலியை கழட்டி போட்டுட்டு வர சொல்ல அப்பத்தா அவர் மட்டும் தாலியை கழட்டி போட்டுட்டு வந்தா நான் அடுத்த நிமிஷம் உயிரை விட்டுவிடுவேன் என்று கூறுகிறார். இதனால் முத்துவேல் இனிமே உனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கு பொண்ணு கிடையாது இதை வீட்டுக்கு ஒரே ஒரு பையன் அது குமார் மட்டும்தான் என தலைமுழுகி விட்டு உள்ளே செல்ல எல்லோரும் முத்துவேலை பின் தொடர்ந்து சென்று விடுகின்றனர்.

பிறகு ராதிகா கோபி இனியா என மூவரும் ஊருக்கு கிளம்பிச் செல்ல பாக்கியா நீங்களாவது இவங்கள வீட்டுக்குள்ள கூட்டிட்டு போங்க என்று சொல்ல பாண்டியன் எல்லாமே என்னைக் கேட்டால் நடக்குது வீட்டுக்குள்ள வாரத்துக்கு மட்டும் என்னுடைய அனுமதி தேவையா என்று கோபப்பட்டு சென்று விடுகிறார்.

பிறகு பாக்கியா கதிர் மற்றும் ராஜியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று விட்டு பாண்டியனிடம் பசங்களை பத்தி நமக்கு ஆயிரம் கனவு இருக்கும் ஆனா சில சமயங்களை அதெல்லாம் தூக்கி போட்டு பிள்ளைங்க பார்க்கும் நிக்க வேண்டியது இருக்கும். நான் என்னுடைய பிள்ளைங்க விஷயத்துல அப்படித்தான் நின்னு இருக்கேன். நீங்களும் அதே மாதிரி நிப்பீங்கன்னு நம்புகிறேன் என்று சொல்ல பாண்டியன் பதில் ஏதும் பேசாமல் எழுந்து சென்று விடுகிறார்.

எல்லோரும் உன்னை சென்று விட பாக்கியா ராஜிடம் உனக்காக இந்த குடும்பத்தில் எல்லாரும் கஷ்டப்பட்டு இருக்காங்க உன்கூட நின்னு இருக்காங்க அந்த நன்றியை நீ என்னைக்கும் மறக்க கூடாது என்று சொல்கிறார். பிறகு கதிரிடம் நீ அப்படியே எழில் மாதிரி அவன் எனக்காக என்ன வேணாலும் செய்வான் அதே மாதிரி நீ உன் அம்மாவுக்காக பெரிய விஷயத்தை செஞ்சிருக்க நீ நல்லா வருவ என்று வாழ்த்துகிறார். பிறகு எழில் பாக்கியா இருவரும் சென்னைக்கு கிளம்பி வருகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 14-02-24
baakiyalakshmi serial episode update 14-02-24