Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்ணன் மீது கோபத்தைக் காட்டிய கோபி.. அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. இன்றைய பாக்யலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 14.05.22

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல்கள் தற்போது மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

இன்றைய எபிசோட்டில் தனம் பாக்கியாவிடம் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக தானே இருக்கீங்க என கேட்க பாக்கியா எங்களுக்கு என்ன நாங்க சந்தோஷமாகத்தான் இருக்கும் என சமாளிக்க பொய் சொல்லாதீங்க அண்ணி நாங்களும் பார்த்துகிட்டு தான் இருக்கோம் என கூறுகிறார். ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சிட்டியா என பாக்கியா சொல்ல நீங்க ஊருக்கு வந்திருந்த போதும் கவனித்தோம் என கூறுகிறார் தனம். இந்த நேரத்தில் ஈஸ்வரி கூப்பிட அப்போது செல்வி கோபி சாருக்கு அக்காவை பிடிக்கவே பிடிக்காது எப்போதும் சிடுசிடுவென்று கோபப்பட்டு கொண்டே இருப்பார். இந்த ரெண்டு வருஷமா இன்னும் ரொம்ப கோபப்படுகிறார். அவருக்கு யாரை யாரோடு தொடர்பு இருக்குன்னு சந்தேகமா இருக்கு, நானும் ஒரு பொம்பளையோட அவர பார்த்து இருக்கேன். எப்ப இங்கிருந்து கிளம்பலாம் என்று பாத்துக்கிட்டு இருக்காரு. நான் எதாச்சும் சொன்னா அக்கா என்னை வேலையை விட்டு அனுப்பி விடும் இவரை பத்தி என்னைக்கு வீட்டுக்கு தெரிய போகுதோ, பாவம் பாக்கியா அக்கா என சொல்லி வருத்தப்படுகிறார்.

பிறகு பாக்கியா எல்லோருக்கும் ஒரே மாதிரியாக புடவை எடுத்து வந்து கொடுக்கிறார். இதைப்பார்த்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு மூர்த்தியின் கோபியின் அப்பாவும் உட்கார்ந்து பரமபதம் விளையாடிக்கொண்டிருக்க அப்போது ஈஸ்வரி வந்து மூர்த்தி இடம் பேச மூர்த்தி நீங்க ரெண்டு பேரும் நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கணும் குடும்பத்தில் பெரிய உடனே நீங்க தான் இருக்கிங்க என கண் கலங்குகிறார்.

இந்த பக்கம் கோபி என்ன செய்வது என தெரியாமல் குழம்பிக்கொண்டு இருக்க அப்போது கண்ணன் வந்து wi-fi பாஸ்வேர்டு என்ன என கேட்க மண்ணாங்கட்டி என சொல்ல அதற்கு ஸ்பெல்லிங் கேட்கிறார் கண்ணன். இதனால் கோபி கடுப்பாகி கண்ணனைக் கண்ட அந்த நேரத்தில் ஜீவா வந்துவிட பிறகு கண்ணன் வருத்தத்தோடு கீழே சென்று விடுகிறார். ஜீவா கோபியிடம் மன்னிப்பு கேட்க கோபி என் மேல தான் தப்பு நான் தான் என்னுடைய டென்ஷனை கண்ணன் மீது காட்டி விட்டேன் எனக் கூறுகிறார்.

அதன் பிறகு மூர்த்தி ரூமுக்குள் இருக்க அப்போது கோபி உள்ளே வர மூர்த்தியை பார்த்ததும் நைசாக நழுவ மூர்த்தி அவரை கூப்பிட்டு உட்கார வைக்கிறார். அவரிடம் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் எழில் மாமா வாங்க சாப்பிட என கூப்பிடுகிறார். பிறகு கோபி எங்க போய் சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிடுவேன் என சொல்லி வெளியே சென்றுவிட பிறகு மூர்த்தி உனக்கும் அப்பாவுக்கும் ஏதாவது பிரச்சினையா ரெண்டு பேரும் ஏன் பேசுவதில்லை என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை என எழில் சமாளித்து விடுகிறார்.

பிறகு கதிர் தனம் மற்றும் மூர்த்தி ஆகியோர் வெளியில் ஒன்றாக இருந்து எழிலுக்கும் அப்பாவுக்கும் ஏதாவது பிரச்சனையா என மூர்த்தி கேட்க எனக்கும் அப்படித்தான் தெரியுது என கதிர் சொல்கிறார். பிறகு தனம் அண்ணன் கூட அண்ணிகிட்ட ரொம்ப கோவமா இருக்காரு சரியா பேசுறதில்லை என சொல்ல மூர்த்தி நைட் எல்லாம் அவருக்கு போன் வருது வெளியே போய் ரொம்ப நேரம் பேசிட்டு வராது அவர சுத்தி ஏதோ நடக்குது என கூறுகிறார்.

பிறகு வீட்டில் டெக்ரேசன் வேலைகள் நடக்கின்றன. பாக்கியா ஸ்வீட் செய்து நாம் அவருக்குக் கொடுத்து டேஸ்ட் எப்படி இருக்கு என சொல்ல சொல்கிறார். அவரும் சாப்பிட்டு விட்டு சூப்பராக இருக்கு என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் கோபி ராதிகாவுக்கு போன் செய்ய அவர் கண்டிப்பாக நாளைக்கு நாம பிறந்தநாள் பங்ஷனுக்கு போகணும். இந்த ஜென்மத்துல உங்ககிட்ட பேச மாட்டேன் என கூறுகிறார். பிறகு தன்னுடைய நண்பனுக்கு போன் செய்த கோபி ராதிகா சொன்னதைச் சொல்ல நாளைக்கு உனக்கு சங்கு தாண்டி என கூற இந்த பிரச்சனை நடக்க விடமாட்டேன் எப்படி நிறுத்துறேன் பாரு என சவால் விடுகிறார். குப் இப்படிப் பேசிக் கொண்டிருப்பதை கதிர் கேட்டு விடுகிறார்.

Baakiyalakshmi Serial Episode Update 14.05.22
Baakiyalakshmi Serial Episode Update 14.05.22