Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியா எடுத்த முடிவு. கோபத்தில் ஈஸ்வரி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 14-12-23

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராமமூர்த்தி பாக்கியாவின் கேண்டினில் கூட்டம் குவிவதாக சொல்லி வீடியோ பார்த்து கோபி மற்றும் ஈஸ்வரியை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்த சமயத்தில் பாக்கியாவும் கேன்டீன் முடித்து வீட்டிற்கு வர பிசினஸ் ரொம்ப நல்லா போகுது இன்னைக்கு எல்லாமே ரொம்ப சீக்கிரமா காலி ஆயிடுச்சு நாளையிலிருந்து எல்லாமே இன்னும் அதிகமாக செய்யணும் என்று சொல்ல ஈஸ்வரி ஒருநாள் வியாபாரம் ஆகுதுன்னு செய்ய வேண்டாம் இப்பவும் நான் சொல்றேன் திரும்பவும் ஏதாவது பிரச்சினை வரலாம் யாருக்காவது கொடுத்திடு என்று கூறுகிறார். ஆனால் பாக்கியா எனக்கு நம்பிக்கை இருக்கு இதை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று கூறுகிறார்.

அதன் பிறகு இன்னொரு விஷயம் சொல்ல மாட்டேன் புதுசா ஒரு ஸ்வீட்ட அறிமுகப்படுத்தப் போறேன் அதுக்கு என்ன பெயர் வைக்கிறது தான் தெரியல எல்லாரும் அதை பற்றி தான் யோசிச்சிட்டு வந்தோம் என்று செல்வி சொல்ல பாக்யா நான் ஒரு பேர கண்டுபிடிச்சிட்டேன் என்று கூறுகிறார்.

உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்து பிறகு தான் எனக்கு அந்த பேர் ஞாபகம் வந்துச்சு உங்க பேரையும் அத்தை பேரையும் சேர்த்து ராமேஸ்வரின்னு பெயர் வைக்கலாம் என்று சொல்வதாக எல்லோரும் வேறு சூப்பர் என பாராட்டுகின்றனர். கோபி அதெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க என ஈஸ்வரியை ஏற்றி விட அவர் என் பேரு உன்னை வச்சு நீ எனக்கு ஐஸ் வைக்க பார்க்காத எதுவும் தேவையில்லை என்று சொல்லி எழுந்து சென்று விடுகிறார்.

அடுத்ததாக வீட்டில் அவரது அம்மாவும் அப்பாவும் ஜெனியின் வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டிருக்க செழியன் வீட்டுக்கு வர ஜோசப் அவரை அடித்து வெளியே போக சொல்கிறார். குழந்தைக்கு தடுப்பூசி போடணும் அதுக்கான சீட்டை கொடுத்துட்டு போக வந்ததாக சொல்லி ஜெனியிடம் கேன்டீனுக்கு வந்ததற்காக நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

பிறகு ஜெனியின் அம்மா மரியம் இன்னமும் ஜெனிக்கு அந்த குடும்பத்து மேல தான் பாசம் இருக்கு அவ செழியன் மேல கோபமா இருக்காளே தவிர அவ மனசு முழுக்க அவன் தான் இருக்கான் அதனால நீங்க ஒருமுறை செழியன் கிட்ட பேசுங்க என்று சொல்ல இன்னமும் பேச என்ன இருக்கு ரெண்டு பேருக்கும் விவாகரத்து வாங்கி கொடுத்துட்டு ஜெனிக்கு வேறொரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்கணும் என்று சொல்ல மரியம் அதுக்கு ஜெனி ஒத்துக்க மாட்டா.

எனக்கு என்னவோ செழியன் திரும்ப திரும்ப வந்து நிற்கிறது பார்த்தா அந்த பொண்ணு சொல்ற அளவுக்கு தப்பு நடந்திருக்க வாய்ப்பில்லைன்னுதான் தோணுது நீங்க ஒரு முறை அவர்கிட்ட பேசுங்க என்று பேசி ஒரு கட்டத்தில் ஜெனியின் அப்பாவையும் சம்மதிக்க வைக்கிறார். பிறகு அவர் செய்ய எனக்கு போன் போட்டு உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று நாளைக்கு ஒரு காபி ஷாப் அட்ரஸ் அனுப்புறேன் அங்க வந்துடுங்க என்று போனை வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து பாக்யாவின் கேண்டினில் வியாபாரம் ஜோராக நடந்து கொண்டிருக்க எல்லோரும் அந்த ஸ்வீட்டை கேட்டு கேட்டு சாப்பிடுறாங்க அது சூப்பர் ஹிட் ஆகிடுச்சு என்று பேசிக் கொண்டிருக்க கணேஷ் வெளியில் வந்து நிற்பதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 14-12-23
baakiyalakshmi serial episode update 14-12-23