தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா பணம் கிடைத்துவிட்டது என்ற விஷயத்தை வீட்டில் சொல்ல அனைவரும் சந்தோஷப்பட ஈஸ்வரி அவ்வளவு பணத்தை எப்படி அவர் தூக்கி கொடுத்தார்? ஏன் கொடுக்கணும் என கேள்வி எழுப்ப பேங்கில் பணம் கிடைக்கல அதனால அவர் கொடுத்தார் அவரும் ஒரு பினான்ஸ் கம்பெனி வச்சிட்டு இருக்கார் என சொல்கிறார்.
வட்டி எவ்வளவு என கேட்க பேங்க்க விட கொஞ்சம் ஜாஸ்தி தான் என்ன சொல்ல அப்படி சொல்லு அதனால தான் கொடுத்து இருக்கிறார் என ஈஸ்வரி பதில் கூறுகிறார். அடுத்து பாக்யா மற்றும் எழில் இருவரும் கேன்டீன் ஆர்டர் எடுக்க பணம் கட்டுவதற்காக ராதிகா ஆபீஸ்க்கு வருகின்றனர்.
கம்பெனி முதலாளியை பார்த்து பணத்தை கட்டி விட்டு கேண்டினை சுத்தி பார்த்துக் கொண்டிருக்கும் போது இதை கவனித்த ராதிகா ஓனரிடம் சென்று அவங்க அவ்வளவு நல்ல கேட்டரிங் கிடையாது, நான் விசாரித்து பார்த்த வரைக்கும் நல்லபடியா சொல்லல இவங்க வேண்டாம் என ராதிகா சொல்ல போனதும் சரி என கூறுகிறார்.
அடுத்ததாக வீட்டுக்கு வரும் ராதிகா போன் நோண்டிக் கொண்டிருக்கும் மயூரா மற்றும் இனியாவை படிங்க என சொல்ல இனியா எதுவும் சொல்லாமல் இருக்கிறார். பிறகு ராதிகா பேச இனிய கண்டுகொள்ளாமல் இருக்க இருவருக்கும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட ராதிகா இனியாவை அடிக்க கை ஓங்க இனியா கையைப் பிடித்து தள்ளி விடுகிறார். ஏன் டாடி கூட இதுவரைக்கும் என்ன அடிச்சது கிடையாது, நீங்க அடிக்க வரீங்க இதை அவர்கிட்ட சொன்னா என்ன ஆகும்னு தெரியுமா பார்த்து நடந்துக்கோங்க என மிரட்டல் தோணியில் பேசிவிட்டு உள்ளே செல்கிறார்.
அடுத்து பாக்கியா கேன்டீன் ஆர்டருகாக அதிகமான பணத்தை செலவு செய்து தேவையான பொருட்களை வாங்க ஈஸ்வரி செலவு நீண்டு கொண்டே போகுதே என வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.