தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொண்டிருக்க இனியா தயவுசெஞ்சு எனக்காக யாரும் சண்டை போடாதீங்க இனிமே நான் ஆகாஷ் கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டேன்ல இதுக்கு எனக்காக யாரும் சண்டை போட வேண்டாம் என மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார் உங்களுக்கு நான் இங்கே இருக்கிறது புடிக்கலனா சொல்லிடுங்க நான் இங்கிருந்து போயிடுறேன் என்று சொல்லி அழ எழில் இனியாவை தூக்கி நிற்க வைத்து இப்படி எல்லாம் பேசாத இனியா என்று ஆறுதல் சொல்லி அழைத்து செல்கிறார்.
கொஞ்ச நேரத்தில் செல்வி பாக்யாவின் வீட்டிற்கு வர ஈஸ்வரியும் கோபியும் ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் உடனே ஈஸ்வரி செல்வியை அங்கேயே நிற்குமாறு தடுத்து நிறுத்துகிறார் உடனே பாக்யாவும் அமிர்தமும் கிச்சனிலிருந்து வர என்ன தைரியம் இருந்தால் நீங்க வந்திருப்பாய் என்று ஈஸ்வரி செல்வியை பார்த்து கேட்கிறார். அதற்கு செல்வி நான் ஒன்னும் இங்க சும்மா வரல என் பையன ரெண்டு பேர் அடிச்சு ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிருக்காங்க இப்ப என் கையில ஒரு ரூபா செலவுக்கு இல்ல அதனால என் புருஷனுக்கு தெரிஞ்சா குடிச்சு அழிச்சிடுவான்னு அக்கா கிட்ட நாங்க கொடுத்து வச்சிருந்தேன் அந்த நகையை வாங்கத்தான் வந்தேன் என்று சொல்ல பாக்யா அந்த நகையை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார்.
செல்வியை பாக்யா உள்ளே கூப்பிட வேணாம் அக்கா மரியாதை இல்லாத வீட்டுக்கு வரக்கூடாதுன்னு எனக்கும் தெரியும் என்று சொல்லுகிறார். எங்களுக்கு சொந்தம் பந்தம் யாரும் சொல்லிக்கிற மாதிரி கிடையாது அதனால யாரு எப்படி அடிச்சு போட்டாலும் வந்து கேள்வி கேட்க நாதி கிடையாது என்று சொல்ல ஈஸ்வரி கோபப்பட்டு பேச வேண்டுமா உங்களுக்கு இன்னும் ஆத்திரம் அடங்கல்லையா வாங்க ஏற்கனவே உங்க பையன் கைய ஒடச்சிருக்காரு. நீங்க வந்து கால ஒடச்சிடுங்க அப்பையாவது உங்க ஆத்திரம் அடங்கு தானே பார்க்கலாம் என்று சொல்லுகிறார் உடனே செல்வி நாடகமாதா என்று திட்டி விட்டு பாக்யாவிடம் இவளுக்கு ஒன்னும் சம்பள பாக்கி ஏதாவது இருந்தாலும் கொடுத்துடு திருப்பி திருப்பி வந்து ஏதாவது சாக்கு சொல்லிக்கிட்டு நிப்பா என்று சொல்ல கோபி முதலிலிருந்து போக சொல்லுங்கமா பார்த்தாலே கோவம் கோவமா வருது என்று சொல்லுகிறார்.
பாக்யா செல்வியை போக சொல்ல கொஞ்ச தூரம் நடந்து செல்வி மீண்டும் திரும்பி நின்று அக்கம் பக்கம் இருக்கிறவங்க எல்லாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்பிளைன்ட் கொடுக்க சொன்னாங்க எந்த ஒரு அம்மாவும் பையன் இந்த நிலைமையில இருக்குறத பார்க்கும்போது அதைத்தான் பண்ணி இருப்பாங்க என்று சொல்ல உடனே ஈஸ்வரியும் கோபியும் நீ போலீஸ்க்குன்னா போ கோர்ட்டுக்கு போ எது வந்தாலும் எங்களுக்கு பார்த்துக்க தெரியும் என்று சொல்லுகிறார் அதற்கு செல்வி உங்கள மாதிரி பெரிய ஆளுங்க கிட்ட போட்டி போட்டு நாங்க ஜெயிக்க முடியுமா என்று சொல்லிவிட்டு எனக்கு போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுக்க ரொம்ப நேரம் ஆகாது ஆனால் இனியா பாப்பாவுக்காக தான் நான் கம்ப்ளைன்ட் கொடுக்கல. நான் கம்ப்ளைன்ட் கொடுத்த நான் என்ன விஷயத்துக்காக கம்பிளைன்ட் கொடுக்குற நீங்க எதுக்காக அடிச்சீங்க என்றதையும் சொல்ல வேண்டியதா இருக்கும் அது மட்டும் இல்லாம இனியா பாப்பாவும் ஆகாஷும் லவ் பண்ண விஷயம் சொல்ல வேண்டியதா இருக்கும் அதை சொன்னா இனிய பாப்பாவ போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து விசாரிப்பாங்க அதனால தான் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகல.
இனியா பாப்பா நாலு வயசு இருக்கும் போது இந்த வீட்டில நான் வேலைக்கு சேர்ந்தேன். நீங்க வேணா என் புள்ள வேற இனியா பாப்பா வேற என்ன நினைக்கலாம் ஆனா நான் அப்படி நினைக்கல எனக்கு ரெண்டு பேருமே ஒன்னு தான் இப்பயும் இனியா பாப்பாவுக்காகவும் பாக்கியா அக்காவுக்காக தான் நான் கம்ப்ளைன்ட் கொடுக்கல என்று சொல்லுகிறார். நான் எதுக்கு இன்னும் உங்க முன்னாடி நின்னு பேசிகிட்டு இருக்கேன் செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சிட்டீங்க எல்லோரும் நல்லா இருங்க சந்தோஷமா இருங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
பாக்யா கிச்சனில் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்க கோபி வருகிறார். உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பாக்யா என்று சொல்லிவிட்டு நீ வெளியே பிசினஸ்ல எடுக்குற முடிவு எல்லாமே தெளிவா எடுக்கிற ஆனா குடும்பமும் வரும்போது ஏன் உன்கிட்ட ஒரு தடுமாற்றம் இருக்கு ஒருவேளை தொடர்ந்து பிரச்சனைகளா வந்துட்டு இருக்கு அதனால இப்படி இருக்கியா என்று கேட்கிறார் குடும்ப விஷயத்தை நான் பார்த்துக்கிறேன் எதுமே இதுக்கு மேல நீ எந்த டென்ஷனும் ஆகாத இது மட்டும் இல்லாம அந்த செல்வி கூட பழகுவதை விட்டு என்று சொல்ல உடனே பாக்யா அப்படியா நான் செல்வி கூட பழகுறத விட்டுற அதனால் உங்க பசங்களுக்கு அடிதடி சொல்லிக் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் உட்கார வைக்க போறீங்களா என்று கேட்கிறார்.
ஆயிரம் தான் நீங்க காரணம் சொன்னாலும் ஆகாஷ நீங்க அடிச்சது தப்பு என்று சொல்ல இதுக்கு நான் காரணம் சொல்லி சலிச்சு போயிட்ட நீ நம்ம பொண்ணு பக்கம் தானே சப்போட்டா இருக்கணும் என்று கேட்க அநியாயம் நடக்கிறதுக்கு சப்போட்டா சொல்றீங்களா என்று கோபப்படுகிறார். கோபி என்ன சொல்லுகிறார்? அதற்கு பாக்கியவின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.