தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி குடிபோதையில் இருக்க செழியன் காரை ஓட்டி வர நான் தப்பு பண்ணிட்டேன் நீங்க எல்லாரும் நல்லவங்க, நான் தான் பேட் மேன் என புலம்பி கொண்டு வருகிறார்.
பிறகு செழியனிடம் எங்க கூட்டிட்டு போற என கேட்க உங்க வீட்டுக்கு தான் என சொல்ல ஐயையோ என்னை எங்க வேணா கூட்டிட்டு போ ஆனா ராதிகா கிட்ட மட்டும் கூட்டிட்டு போகாதே. நான் இனிமே குடிக்க மாட்டேன் என்று பிராமிஸ் பண்ணி இருக்கேன் ஆனா இப்ப குடிச்சிட்டு வருவதை பார்த்தால் என்ன க்ளோஸ் பண்ணிடுவா, நாளைக்கு என்ன உயிரோடவே பார்க்க முடியாது என புலம்ப வேறுவழி இல்லாமல் செழியன் கோபியை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
குடி போதையில் கோபி தள்ளாடி கொண்டு வருவதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி ஆகின்றனர். கோபியை உட்கார வைக்க அவர் தன்னுடைய அப்பா, இனியா, அம்மா குரல் கேட்டு ஏதேதோ புலம்புகிறார். அப்போது அங்கு வரும் எழில் இவரை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட வேண்டியது தானே என சத்தம் போட ஈஸ்வரி எழிலை கொஞ்சம் அமைதியா இரு என திட்டுகிறார்.
எழில் பாக்கியாவை நினைத்து சத்தம் போட ஈஸ்வரி உனக்கு ஒன்னுனா உங்க அம்மா பதறி ஓடி வருவா இல்ல அந்த மாதிரி தான், அவ என்னதான் தப்பு பண்ணியிருந்தாலும் அவன் என்னுடைய புள்ள இப்படி ஒரு நிலைமையில் அவனை வீட்டை விட்டு அனுப்ப முடியாது என சொல்லி ரூமுக்கு அழைத்துச் செல்கிறார்.
இந்த பக்கம் ராதிகா போன் செய்தும் கோபி போனை எடுக்காமல் இருக்க ராதிகாவின் அம்மா இன்னைக்கு மட்டும் அவர் குடிச்சிட்டு வரட்டும் ஒரு வழி பண்ணிடுறேன். நீ ஒன்னும் கவலைப்படாத ராதிகா உனக்கு நாங்க இருக்கோம் என சொல்கிறார்.
மறுபக்கம் பாக்கியா வருத்தத்தோடு உட்கார்ந்திருக்க இன்னொரு பக்கம் கோபி ரூமில் படுத்துக் கொண்டிருக்க ஈஸ்வரி இங்கே இருக்கிற வரைக்கும் இவன் இப்படி கிடையாது, அங்க போனதுக்கு அப்புறம் ஏன் இப்படி ஆகிவிட்டான் அவ கொடுமைப்படுத்துகிறாளா என கேட்க செழியன் ராதிகா வீட்டுக்கு மட்டும் கூட்டிட்டு போக வேண்டாம் என அழுத விஷயத்தை சொல்கிறார். உடனே இனியாவும் அவங்க எப்பயும் என்னையும் அப்பாவையும் திட்டிவிட்டே தான் இருப்பாங்க இனிமேல் டாடியை அங்க அனுப்ப வேண்டாம் என சொல்ல ஈஸ்வரியும் இனிமே கோபி இங்க தான் இருப்பான் என முடிவெடுக்கிறார்.
எழில் இருவரும் பாக்கி அவனுக்கு ஆறுதல் சொல்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
