தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பத்திரத்தில் கையெழுத்து போட சம்மதம் சொன்னதால் சுதாகர் வெறும் காலி பத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார் எப்படி கையெழுத்து போட முடியும் என்று கேட்க கோபியும் அதையே கேட்கிறார் அதற்கு சுதாகர் சத்தியமா உங்ககிட்ட சொன்ன வார்த்தையை தவிர மீதி எந்த வார்த்தையும் அதில் சேர்க்க மாட்டேன் என்று சொல்ல பாக்கியா கையெழுத்து போடாமல் அமைதியாக இருக்கிறார்.
அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி வந்து ரிசெப்ஷனுக்கு டைம் ஆயிடுச்சு எல்லாரும் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டேன் சுதாகர் உங்க மருமகளுக்கு என் மேல சந்தேகம் இருக்கு அவங்களுக்கு நம்பிக்கை வரல என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி பாக்யாவை தனியாக அழைத்துச் சென்று நீ எதுவும் பயப்படாதே அவர்தான் சொல்றார் இல்ல நம்பிக்கையா என்று சொல்ல ,எதுவுமே எழுதாத பத்திரத்தில் கையெழுத்து போட சொல்றாரு என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி உனக்கு இனியாவோட வாழ்க்கையை விட உனக்கு ரெஸ்டாரன்ட் தான் முக்கியமா அந்த செல்வி பையனுக்கு இனியாவ கல்யாணம் பண்ணி வச்சு லைஃப் கெடுக்க பாக்குறியா ஒழுங்கா கையெழுத்து போடு என்று சொல்லி அனுப்ப பாக்யா வந்து பத்திரத்தில் கையெழுத்து போட நிற்க அந்த நேரம் பார்த்து இனியா சொன்ன வார்த்தையை நினைத்து பார்க்கிறார் இந்த வீட்டுக்காகவும் எனக்காகவும் எவ்வளவு கொடுத்துட்ட அம்மா இதுக்கு மேல உன்னோட ரெஸ்டாரன்ட் விட்டுக் கொடுக்காத என்று சும்மா சொன்னதை நினைக்க உனக்காக நான் எது வேணாலும் விட்டுக் கொடுப்பேன் இனியா என்று நினைத்துக் கொண்டு கையெழுத்து போட்டு விடுகிறார்.
உடனே ரிசப்ஷன் நடக்கிறது இனியாவும் நித்திஷ்ஷும் மாலை மாற்றி மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர். பிறகு ரிசப்ஷன் தொடங்க அனைவரும் போட்டோ எடுத்துக் கொண்டு கிப்ட் கொடுத்தும் ரிசப்ஷன் நல்லபடியாக முடிவடைகிறது. பாக்கியா தனியாக உட்கார்ந்து கொண்டிருக்க எழில் வருகிறார். என்னாச்சும்மா எதுக்கு சோகமா இருக்க என்று கேட்க நான் சோகமா இருந்தா என்ன நீங்க எல்லாரும் சந்தோஷமா தானே இருக்கீங்க என்று சொல்ல எதுக்குமா இப்படி பேசுற என்று கேட்கிறார் உடனே பாக்கியம் இனியா எப்படி இருக்கா அவளுக்கு இதுல விருப்பமா என்று கேட்கும் அவகிட்ட பேசினா அவ உன்ன நினைச்சு வருத்தப்படுற ஆகாஷ் மேல ஒரு கில்ட் இருக்கு நான் பேசிச் புரிய வச்சிட்டேன் என்று சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து எழிலுக்கு போன் வர அவர் சென்று விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் நித்திஷ் பாக்கியாவை கவனித்து வந்து அவரிடம் பேசுகிறார் என்ன ஆன்ட்டி டல்லா இருக்கீங்க என்று கேட்க டயர்டா இருக்குப்பா என்று சொல்லுகிறார் எங்க அப்பா உங்கள பத்தி ரொம்ப பெருமையா சொல்லி இருக்காரு ஆன்ட்டி நாளைக்கு எனக்கு இனியாக்கும் கல்யாணம் ஆக போது ஏதாவது அட்வைஸ் கொடுக்குறீங்களா என்று கேட்க அந்த அளவுக்கு எல்லாம் பெரிய ஆள் எல்லாம் கிடையாது இரண்டு பேரும் சந்தோஷமா ஒத்துமையா விட்டுக்கொடுத்து வாழனும் என்று சொல்ல சரிங்க ஆன்ட்டி என்று சொல்லுகிறார். இவ்வளவு நாளா குழந்தை மாதிரி இருந்தா இப்போ கல்யாணம்ஆக போகுது என்று சொல்ல அதற்கு நிதிஷ் எனக்கு கூட பொறந்தவங்க யாரும் இல்ல ஆன்டி ஆனா என்னோட பிரெண்ட்ஸ் கல்யாணத்துல பார்த்திருக்கேன் அவங்க பொண்ணு எவ்வளவு மிஸ் பண்ணுவாங்கன்னு அதனால நீங்க எப்படி பாத்துக்கிட்டிங்களோ அதைவிட அதிகமா பாத்துக்குறேன் கவலைப்படாதீங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது. நித்திஷ் தாலி கட்டினாரா? இனியாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.
