Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எழில் எடுத்த முடிவு. கடைசியில் காத்திருந்து ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஜெனி செழியன் இடம் வீடு விஷயமாக பேச அவன் நான் எல்லா பணத்தையும் தூக்கி அப்பா கிட்ட கொடுக்கறதுக்கு நான் என்ன இளிச்சவாயனா என்ன பேசுகிறார். அப்பா சொன்ன மாதிரி நாம வேற வீடு வாங்கிக்கலாம் அதுவரைக்கும் என உங்க வீட்ல இருக்கலாம் என கூறுகிறார்.

அடுத்து எப்படி தனியாக உட்கார்ந்து யோசனையில் இருக்க பாக்யா வந்து உட்கார்ந்து நீ உன் சினிமாவை மட்டும் பாரு நான் இந்த பிரச்சனை பாத்துக்குறேன் என சொல்ல எழில் இந்த வீட்டை நாம கண்டிப்பா வாங்குறோம், நான் சொன்ன மாதிரி இந்த வீட்டை அங்க தான் போறேன் அதற்கான என்ன வழி இருக்கோ அத நான் செய்யப் போறேன் என உறுதியாக சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்று விடுகிறார்.

பிறகு எழில் தன்னுடைய நண்பனை பார்த்து பிரச்சனையை சொல்லி ஏற்கனவே தயாரிப்பாளர் ராஜசேகர் ஒருவர் நாம சந்தித்தோம் அவர் கதையை மட்டும் கேட்டாரு, அவர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன் இந்த கதையை அவருக்கு விட்டுவிடலாம் இருக்கேன் என சொல்லி தயாரிப்பாளரை பார்க்க கிளம்பி செல்கிறார்.

இந்த பக்கம் செல்வி கோபி எல்லோரிடமும் வீட்டை விற்கப்பாவதாக சொல்லி இருக்கும் விஷயத்தை வந்து சொல்ல பாக்கியா என்ன செய்வது என யோசிக்கிறார். ஜெனி இடம் வாடகைக்கு வீடு தான் பாக்கணும் அது அவ்வளவு வசதியா இருக்குமானு தெரியல அதுவரைக்கும் நீயும் செழியனும் உங்க வீட்ல இருந்து இருக்கீங்களா என சொல்ல ஜெனி நீங்க எங்க இருக்கீங்க அங்க தான் நானும் இருப்பேன், எனக்கு வசதி எதுவும் இல்லை என்றால் கூட பரவாயில்லை என சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி வர்ஷினியை சந்தித்து வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை சொல்ல வர்ஷினி பணம் ஏதும் தேவையா அப்பாகிட்ட சொல்லி ரெடி பண்ணவா என கேட்க ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் என சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். எழிலுக்கு அப்போ பணம் தேவைப்படுகிறது என அதை வைத்து வர்ஷினி திட்டம் தீட்ட தயாராகிறார்.

அதன் பிறகு எழில் தயாரிப்பாளரை சந்திக்க அவர் படம் இன்னும் பல விஷயம் கிடைத்து கேட்க எண்ணில் அது தனிப்பட்ட விஷயம் எழில் சொல்ல முடியவில்லை என கூறுகிறார். மேலும் தன்னிடம் இரண்டு கதைகள் இருப்பதாகவும் அதை உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் என சொல்ல தயாரிப்பாளர் உங்க கதை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு ஆனா அதை நீங்க டைரக்ட் பண்ண முடியாது என சொல்கிறார். இந்த நாள் எழில் அதிர்ச்சி அடைகிறான். இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update

baakiyalakshmi serial episode-update