Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகா கேட்ட கேள்வி.. பதில் சொல்ல திணறிய கோபி.. இன்றைய பாக்யலக்ஷ்மி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 16.03.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் புருஷனை பற்றி தப்பாக பேசியதால் கோபப்பட்ட பாக்யா செல்வியை இனிமே என் முகத்திலேயே முழிக்காதே என சொல்லி நடுரோட்டில் விட்டு விட்டு கிளம்பி விடுகிறார்.

இதனால் செல்வி வேறு வழியில்லாமல் நடந்தே பாக்கியா வீட்டிற்கு வருகிறார். இந்தப் பக்கம் இவர்கள் அனைவரும் கிளம்பியதும் ராதிகா கோபியை சென்று பார்க்கிறார். கோபி அப்போது தான் போன் பேசிவிட்டு வைப்பது போல வைக்கிறார். உங்களுக்கு உண்மையாகவே போன் வந்துச்சா ஏன் இப்படி பண்றீங்க என ராதிகா கேட்க இந்த நீ வேணும்னா செக் பண்ணி பாரு என கோபி போனை நீட்டுகிறார். எல்லா விஷயத்துலயும் ஓகே ஆனா யாரென மீட் பண்ணனும்னு மட்டும்தான் உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு என ராதிகா சொல்ல நான் ரொம்ப ஷை டைப் உனக்கு தெரியாதா என கோபி கூறுகிறார்.

அதுவும் டீச்சர் மீட் பண்ண மட்டும் உங்களுக்கு விருப்பமே இல்ல. அதான் குன்னக்குடிலயே பார்த்தனே எவ்வளவு ரீசன் சொல்லி தள்ளிப் போட்டிங்க என ராதிகா சொல்ல உடனே கோபி அப்படி எல்லாம் இல்ல சமையல் செய்றவங்கள சந்திச்சு நான் என்ன பண்ண போறேன்? சரி வீடு மாத்துற பிளான் என்ன ஆச்சு என்ன அப்படியே டாப்பிக்கை மாற்றுகிறார்.

இந்த வீட்டுக்கு நிறைய பேர் வந்துட்டு போறாங்க எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சு அதனால நாம புது வீட்டுக்கு போகலாம். புது வீட்ல நம்ப வாழ்க்கையைத் தொடங்கலாம் அதுதான் நல்லா இருக்கும். என் ஃப்ரண்டு ஒருத்தன் அவன் வீட்ட மாத்துறான். நாம அந்த வீட்டுக்கு போய்டலாம் எது கோபி சொல்ல இப்போ வீடு எதுக்கு மாத்தணும் என ராதிகா கேட்க கோபி கம்பி கட்டுற கதையெல்லாம் கூறுகிறார். கடைசியில் ராதிகாவையும் ஒப்புக்கொள்ள வைக்கிறார். ஆனாலும் ராதிகா டீச்சர் பற்றி கேட்டதும் உடனே வீட்டைப் பத்தி பேசி டாப்பிக்கை மாத்திடீங்க என கூறுகிறார்.

இந்த பக்கம் பாக்கியா வீட்டில் வந்து அமர்ந்து யோசனையில் இருக்கையில் என்னாச்சு என கேட்கிறார் எழில். ஆனால் பாக்கியா எதையும் சொல்லாமல் வெயிலில் வந்ததால் டயர்டாக இருக்கு என சொல்லி விடுகிறார். பிறகு வீட்டுக்கு வந்த செல்வி என்னை இப்படியே நடுரோட்டில் விட்டு விட்டு வந்துவிட்ட எவ்வளவு தூரம் நடந்து வறது என சத்தம் போடுகிறார். நான்தான் உன்னை வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டேன் அப்புறம் எதுக்கு வந்த அப்படியே போக வேண்டியதுதானே என பாக்கியா சொல்ல எழில் என்னாச்சு என கேட்கிறார்.

இந்த விஷயத்துல தலையிடாத அவளுக்கு வாய் அதிகமாயிடுச்சு எனக்கூறிவிட்டு செல்வியை வெளியே போக சொல்கிறார். இதனால் செல்வியும் இனிமே வீட்டு வாசற்படியை மிதிக்க மாட்டேன் என சொல்லிவிட்டு அழுதபடியே சென்று விடுகிறார். பிறகு எழில் ஏன்மா என கேட்க பாக்கியா அவங்க அப்பாவை பத்தி தப்பு தப்பா பேசுறா, அதெல்லாம் என்னால கேட்டுட்டு இருக்க முடியாது என கூறுகிறார். அவரு நம்ம கூட இருக்காது என்ற நம்பிக்கையில் தான் என் வண்டி ஓடுது என கூறுகிறார். கொஞ்சநாள் வீட்டிலேயே இருக்கட்டும் அப்பதான் அவளுக்கு புத்தி வரும் என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

பிறகு எது வண்டியை எடுத்துக்கொண்டு செல்வியை நிறுத்துகிறார். பிறகு செல்வி கோபியை துணிக்கடையில் பார்த்த விஷயத்தையும் தற்போது அவருடைய கார் ஒரு வீட்டில் நின்று கொண்டிருந்ததை பற்றியும் கூறுகிறார். அதெல்லாம் அப்பாவை இருக்காது என எழில் சொல்ல நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க. அப்ப என் கண்ணால பார்த்து என்ன பொய்யா என கூறுகிறார். பிறகு எது சரி விடுங்க அக்கா சாயங்காலம் நீங்க எப்பயும் போல வீட்டுக்கு வாங்க அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க. நான் பேசிட்டேன் என கூறுகிறார். பிறகு செல்வியை கூட்டிச் சென்று வீட்டில் விடுகிறார்.

அதற்கு அடுத்ததாக சாயங்காலம் ஈஸ்வரி மற்றும் இனியா இருவரும் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் வந்து வீட்டிற்கு வெளியே அமர்கிறார் செல்வி. பாட்டுப்பாடி இருவரையும் வெறுப்பேற்ற இருவரும் எழுந்து வந்து முதல்ல பாடுவதை நிறுத்து என சத்தம் போடுகின்றனர். இந்த வீட்ல எவ்வளவு நாளா வேலை செய்கிறேன் என்ன பாக்கியா அக்கா வேண்டாம்னு வெளியே அனுப்பிடுச்சு. என்ன மாதிரி ஒரு வேலைக்காரி உங்களுக்கு கிடைப்பாளா? நன்றி இல்லாம இப்படி என்னை வெளியே அனுப்பிட்டீங்க என டயலாக் எல்லாம் பேசுகிறார். பிறகு பாக்கியாவை கூப்பிட்டு ஈஸ்வரி கேட்க செல்வி நான் ஒன்னும் உனக்காக வரல எழில் தம்பிக்காகவும் ஐயாவுக்காவும் தான் வந்தேன் என சொல்லி விட்டு உள்ளே சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 16.03.22
Baakiyalakshmi Serial Episode Update 16.03.22

‌‌ ‌‌