தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவிற்கு கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை மெட்டி போட்டு விடுகிறார். பிறகு அனைவரும் போட்டோக்களை எடுத்துக் கொண்டு பாக்யாவின் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பிறகு இனியா வீட்டில் விளக்கேற்றிய பிறகு ராமமூர்த்தியின் போட்டோவிற்கு மலர் தூவி மரியாதை செய்கிறார். உடனே நித்திஷ் மலர் தூவி மரியாதை செய்ய அனைவரும் உட்காருகின்றனர்.
பிறகு மாப்பிள்ளை அம்மா பாலும் பழமும் கொடுக்கணும் என்று சொல்ல அமிர்தா எடுத்துக் கொண்டு வந்து இனியாவிற்கு முதலில் கொடுக்க மாப்பிள்ளை அம்மா என்னதான் உங்க வீட்டு பொண்ணா இருந்தாலும் என் பையனுக்கு தானே முதலில் கொடுக்கணும் என்று கிண்டல் பண்ணுகிறார். உடனே அமிர்தா மாப்பிள்ளைக்கு கொடுக்கப் போக அவர் இனியாவுக்கே குடுங்க என்று சொல்ல உடனே மாப்பிள்ளை அம்மா இப்பவே இவ்வளவு சப்போர்ட்டா வந்த உன்ன பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்றான் பாருங்க என்று கிண்டல் பண்ண இருவருக்கும் பாலும் பழமும் ஊட்டி விடுகின்றனர். பிறகு பாக்யா இனியாவுடன் ரூமில் பேசிக் கொண்டிருக்க கண்கலங்கி இருவரும் அழுகின்றனர்.
உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் இனியா குட்டி நீ இங்க இருந்து போறது நாள இது உன்னோட வீடு இல்ல என்று ஆய்டாது நீ எப்ப வேணாலும் இங்க வரலாம் அதே மாதிரி இங்க எல்லாரும் உனக்கு பாசம் கொடுத்த மாதிரி அங்கேயும் எல்லாமே கிடைக்கணும்னு நினைக்க கூடாது அங்க மருமகளா உன்னோட கடமைகளை நீ செய்யணும் அது மட்டும் இல்லாம உனக்குன்னு ஒருத்தர் இருக்காரு அவர புரிஞ்சுகிட்டு லைப் ஸ்டார்ட் பண்ணா கொஞ்ச நேரம் ஆகும் ஆனா சண்டை எதுவும் போடக்கூடாது என்று சொல்லுகிறார். அதே சமயத்துல உன்னோட படிப்பையும் வேலையையும் எதுக்காகவோ விட்டுடாத உனக்கானது கண்டிப்பா நீ தேடிக்கணும் இனியா என்று சொல்லி கண்கலங்கி கொண்டே இருக்க கோபி வருகிறார் இனியாவிடம் பேச வேண்டும் என்று சொல்ல பாக்யா சென்று விட கோபி பேசுகிறார்.
உன்ன இப்பதான் பிறந்து கையில வாங்கின மாதிரி இருக்கு இனியா எப்பவுமே பெத்தவங்க கண்ணுக்கு பசங்க வளர மாட்டாங்கன்னு சொல்லுவாங்க அதை இப்பதான் உணர உன்னை இப்பதான் ஸ்கூல்ல எடுத்துட்டு போய் விட்ட மாதிரி இருக்கு நீ அப்பா மேல கோவமா இருக்கியா இல்ல சந்தர்ப்ப சூழ்நிலை புரிஞ்சிகிட்டியான்னு எனக்கு தெரியாது ஆனால் உனக்கு நான் நல்லதை மட்டும் தான் செய்வேன் என்பதை தெரிஞ்சுக்கணும் என்று சொல்லுகிறார். நமக்குள்ளவே ஒரு சின்ன வட்டத்தை போட்டுக்கிட்டு அதுதான் உன் உலகம் இருந்த அப்படி இல்ல ரொம்ப பெருசு என்று சொல்றதுக்காக தான் நமக்குள்ள ஒரு சின்ன சின்ன முரண்பாடுகள் நடந்தது எல்லாமே அதுக்காக என்ன மன்னிச்சிடுங்க ஒரு அப்பாவா என் கடமையை தான் நான் செய்தேன் அது உனக்கு இப்ப இல்ல நானும் எப்பயாவது புரியும். மாப்ள உன்ன நல்லா பாத்து பாரு எதுவா இருந்தாலும் அப்பாவுக்கு போன் பண்ணு என்று சொல்லி சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார்.
பிறகு கிளம்பலாமா என்று சொல்ல இனியா ,செழியன் மற்றும் எழிலிடம் கிளம்புவதாக சொல்ல அவர்களும் கண்ணீருடன் இனியாவிற்கு ஆறுதல் சொல்லுகின்றனர். பிறகு அமிர்தா, ஜெனி, ஈஸ்வரி என அனைவரிடமும் இனியா கண்கலங்கி அழ ஈஸ்வரி இனியாவுக்கு கல்யாணம் ஆகணும்னு நினைச்சது தானா அவன் இல்லாமல் நான் எப்படி இருக்க போறேன்னு தெரியல என்று அழ சுதாகர் நீங்கதான் ஆறுதல் சொல்லணும் நீங்களே எப்படி அழுதா எப்படி என்று சொல்ல ஒரு வழியாக இனியாவை அனுப்பி வைக்கின்றனர்.
பிறகு சுதாகர் வீட்டில் என்ன நடக்கிறது? என்ன பேசுகின்றனர்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
