தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா மாமனார் ராமமூர்த்திக்கு போன் செய்து லைசென்ஸ் போட்டோ எடுத்து அனுப்ப சொல்லி இருந்த நிலையில் அவர்கள் உடனே அனுப்புறோம் என அமிர்தாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்புகிறார்.
இவர்கள் பேசிக் கொண்டதை பார்த்த கோபி இனியாவுக்கு போன் செய்து ஏதாவது பிரச்சனையா என கேட்க இனியா அங்கு நடந்த விஷயங்களை சொல்ல பிறகு கோபி காரில் வீட்டுக்கு கிளம்பி வந்து யாரும் இல்லாத நேரம் பார்த்து பாக்கியா ரூமுக்குள் சென்று ஒரிஜினல் லைசென்ஸ் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்.
பின்னாடியே ஆட்டோவில் வந்து இறங்கிய ராமமூர்த்தி, அமிர்தா வீடு முழுக்க தேடியும் லைசென்ஸ் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தை பாக்யாவிடம் சொல்ல எல்லோரும் பதற்றம் அடைய அங்கே போலீஸ் லைசன்ஸ் வருமா வராதா என கேட்டுக்கொண்டு இருக்க பதற்றம் அதிகமாகிறது. நான் எழில் கிட்ட கேட்கிறேன் என்று சொல்லி பாக்கியா போன் போடுகிறார்.
மறுபக்கம் கோபி ஹோட்டலுக்கு வந்து சதீஷ் இடம் நடந்த விஷயங்களை சொல்லி இப்பதான் எனக்கு குளுகுளுன்னு இருக்கு என சந்தோஷமாக பேச பழனிச்சாமி எதேர்ச்சையாக அங்கு வருகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
