தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா மற்றும் எது கீழே வர ஈஸ்வரி காபி குடிக்கிறியா என்று கேட்க எழில் குடிச்சிட்டேன் பாட்டி என்று சொல்கிறார்.
பிறகு பாக்கியா எழிலிடம் அமிர்தா எப்படி இருக்கா என்று கேட்க வருத்தப்பட்டு தான் இருக்கா என்று சொல்கிறார். ஈஸ்வரி அவ எதுக்கு வருத்தப்படணும்? அவளை நினைச்சு நாம தான் வருத்தப்படணும் என்று சொல்கிறார். அடுத்து பாக்யா கணேஷோட அம்மா திரும்பத் திரும்ப போன் பண்ணிட்டு இருந்தாங்க என்று எழிலுக்கும் அமிர்தாவுக்கும் விஷயம் தெரியும் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
பிறகு எழில் அவங்க பாவம் அமிர்த்தாவை அப்பா அம்மா மாதிரி இருந்து பாத்துக்கிட்டாங்க போயிட்டு பாத்துட்டு வரட்டும் என்று சொல்ல எல்லோரும் வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்கின்றனர். எழில் நான் கூட்டிட்டு போயிட்டு வரேன் என்று சொல்ல ஈஸ்வரி போறதா இருந்தால் அவ மட்டும் தனியா போகட்டும் நீ போகக்கூடாது என்று கூறுகிறார். பாக்கியா அப்படின்னா நான் கூட போயிட்டு வரவா என்று கேட்க எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு தான் என்கிட்ட வந்து பேசுறியா என்று ஈஸ்வரி ஆவேசப்படுகிறார். கோபி ஒரு வேலை நீ கூட்டிட்டு போனா என்ன பிரச்சனை வந்தாலும் அதை நீ தான் சமாளிக்கணும் யாரையும் உதவிக்கு கூப்பிடக்கூடாது என்று கண்டிஷன் போடுகிறார்.
பிறகு அமிர்தா நிலா பாப்பா மற்றும் பாக்கியா மூவரும் கணேசனின் அப்பாவை பார்க்க கிளம்பி வருகின்றனர். மேலும் கோபி நினைத்து இங்குமங்கும் நடந்து புலம்பி கொண்டு இருக்க ராதிகா ஆபீஸ் போகலையா என்று கேட்க அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். போகணும் ஆன்லைன் மீட்டிங் இருக்கு இது அது என்று சொல்லி சமாளிக்க முயற்சி செய்ய ராதிகாவுக்கு சந்தேகம் வருகிறது.
மீண்டும் கணேஷின் அம்மா போன் பண்ணி என்னாச்சு என்று கேட்க பாக்யா வந்துகிட்டு இருக்கோம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவோம் என்று கூறுகிறார். பிறகு கணேஷ் வரட்டும் இதுக்கப்புறம் அமிர்தாவும் நிலாவும் நம்ம கூட தான் இருக்க போறாங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
பிறகு அவர்கள் வீட்டுக்குள் வந்ததும் கணேஷ் வந்து நின்று அதிர்ச்சி கொடுக்க பாக்யா அமிர்தாவை கூட்டிக்கொண்டு வெளியே செல்ல முயற்சி செய்யும்போது அமிர்தா கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நிலா பாப்பாவையும் புடுங்கிக் கொள்கிறார். பிறகு அமிர்தா மற்றும் நிலாவை ஒரு காருக்குள் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பிச் செல்ல பாக்யா அதிர்ச்சி அடைந்து ஆட்டோவில் பின்தொடர்ந்து செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
