தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த செல்வி எனக்கு ஒரு காபி போட்டுக்கொடு என்று கேட்க என்ன அதிகாரமாய் கேட்கிற என பாக்கியா கேட்கிறார். இனிமே இப்படித்தான் என சொல்கிறார்.
அதன் பிறகு இரவு ஆனதும் பாக்கியா கோபிக்காக காத்து கொண்டு இருக்க கோபியும் வீட்டிற்கு வருகிறார். அவர் வீட்டுக்குள் வந்ததும் பாக்கியா என்னங்க என அழைக்க நான் சாப்பிட்டு விட்டேன் என போனை பார்த்து சிரித்துக் கொண்டே மேலே சென்று விடுகிறார் கோபி.
அதன்பிறகு பாக்கியா படிக்கட்டில் அமர அப்போது கோபி கீழே இறங்கி வந்து தண்ணீர் கேட்கிறார். தண்ணீரை கொடுத்த பாக்கியா மதியம் உங்களுக்கு போன் பண்ணேன் ஏன் எடுக்கல என கேட்கிறார் ஆபீஸில் மீட்டிங்கில் இருந்தேன் என கோபி சொல்கிறார். பிறகு பாக்கியா நான் உங்க காரை பார்த்தேன் அதுவும் இரண்டு தெரு தள்ளி தான் பார்த்தேன். அங்கிருந்து தான் பார்த்தேன் என்று சொல்ல அப்படியா அதெல்லாம் இருக்காது என கோபி சொன்ன கார் நம்பரை கரெக்டா சொல்லி கேட்கிறார் பாக்கியா.
உடனே கோபி சிரித்தபடி ஒரு மதியம் நீ சொல்றியா ஆமா நாங்க தான் இருந்தேன் ஒரு கிளைன்ட் மீட்டிங் அதற்காக வந்திருந்தேன். அதனாலதான் போனை எடுத்து இருக்க மாட்டேன். அப்படியே அது மீட்டிங்ல முடிச்சிட்டு நேரா ஆபிசுக்கு போய் அங்கு ஒரு மீட்டிங் இன்னைக்கு எல்லாம் ஒரே டைட் முடியல என சொல்கிறார்.
அதன்பிறகு பாக்கியா இவர் ஏன் இப்படி பொய் மேல பொய் சொல்கிறார் என யோசிக்கிறார். ஆனாலும் ராதிகா வீட்டில் இருந்தது இவராக இருக்காது எனவும் மனதுக்குள் நினைக்கிறார். அதன்பிறகு எழில் மற்றும் ஜெனி அவருடைய தாத்தாவை நடக்க வைக்கின்றனர்.
இதற்கு அடுத்ததாக கிச்சனில் செல்வி மற்றும் பாக்கியா இருவரும் இருக்கும் போது எழில் அங்கு வருகிறார். செல்வி இனிமே கோபி சார் பத்தி உன்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் அவரை மாதிரி உத்தமர் இந்த உலகத்திலேயே கிடையாது என கூறுகிறார். பாருடா எப்படி பேசுறா என பாக்கியா சொல்ல செல்வியை அக்கா கொஞ்சம் அமைதியா இருங்க என்று சொல்கிறார். பிறகு நான் போய் பாத்திரத்தை விளக்குறேன் என செல்வி கிளம்பிவிடுகிறார். உங்க அப்பா இப்ப நாம் நிறைய பொய் சொல்லாது என பாக்கியா நடந்த விஷயத்தைச் சொல்கிறார். அந்த நேரத்தில இவ வந்து எதையாவது ஒன்னு சொல்லும்போது பயமா இருக்கு என கூறுகிறார்.
அப்பதான் குடும்பத்தோட ஆணிவேர் அவர் இல்லனா இது குடும்பத்துடன் சூழ்நிலையை என்ன ஆகும் என பாக்கியா சொல்ல அதெல்லாம் நடக்காது அப்பா அந்த அளவுக்கு வொர்த் இல்லை என எழில் சொல்கிறார். பிறகு பாக்கியா நீ போய் உன்னுடைய பட வேலைகளை கவனி என அனுப்பி வைக்கிறார்.
அதன்பிறகு பாக்கியா கல்யாண ஆர்டரை சமைப்பதற்காக அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கும் போது மேலே இருந்து கீழே வந்த கோபி பாக்கியாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது இதை சமாளிச்சி ஆகணும் என முடிவு செய்கிறார். என்ன ஒருத்தன் ஆபீசுக்கு கூட கிளம்பும் இருக்கானே என்ன ஏதுன்னு கேட்க மாட்டியா என கேட்கிறார் கோபி. கேட்டா மட்டும் நீங்க உண்மையா சொல்லப்போறீங்க என பாக்கியா சொல்கிறார்.
உடனே சந்தேகம் வந்துருச்சு என்பதை கன்ஃபார்ம் செய்து கொண்ட கோபி ஒரே உடம்பு வலியா இருக்கு, நடக்கக் கூட முடியல நீ உடம்பு வலிக்கு மாத்திரை வெச்சு இருக்கியே அதை கொடு என கேட்கிறார். உடனே பதறிப்போன பார்க்க கோபிக்கு மனதில் சுடுதண்ணீர் இட்லி என கொடுத்து பார்த்து கொள்கிறார். இதனால் நேரம் வேற போய்க் கொண்டே இருக்கு, கல்யாண ஆர்டரை சமைக்க வேண்டிய வேலை இருக்கிறது. பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.