Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இனியா எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 17-11-22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி இனியாவுக்காக வீட்டுக்குள் வந்து மற்றவர்களிடம் சண்டை போட எல்லோருக்கும் இடையில் வாக்கு வாதம் முற்றுகிறது. பாக்கியா அப்பன்னா பேர்ல மட்டும் இருக்கக்கூடாது பொறுப்பாகவும் இருக்க வேண்டும் இனியா ஸ்கூலுக்கு போய் இருந்த விஷயத்தை நீங்க என்கிட்ட சொல்லி இருக்கணும் என சொல்ல நான் எதுக்கு சொல்லணும் நீ யாரு என கேட்க ஈஸ்வரி அவளோட அம்மா என கூறுகிறார்.

அவ செஞ்சது சின்ன தப்பு அதுக்காக இப்படி அவளை டார்ச்சர் பண்ணுறது நல்லா இல்ல என்ன கோபப்படுகிறார். நீ எல்லாரையும் விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டவன் தானே என சொல்ல நான் இவதான் வேணான்னு போனேனே தவற என் குழந்தைங்க வேணாம்னு சொல்லல. இனியா இப்ப கூட என் கூட வரேன்னு சொன்னா நான் கூட்டிட்டு போக தயாரா இருக்கேன் என சொல்ல எல்லோரும் கோபப்படுகின்றனர்.

பிறகு ஒரு கட்டத்தில் பாக்கியா இனியாவே சொல்லட்டும் நீ சொல்லி இனியா என கூற அவள் பாக்கியா அடித்தது கோபி தனக்கு ஆதரவாக பேசியது உள்ளிட்ட விஷயங்களை நினைத்துப் பார்த்து இங்கு இருந்தா நம்மள கொன்னுடுவாங்க எஸ்கேப் ஆகிடனும் என நினைத்து கோபியின் கையை பிடித்து கொள்கிறார்.

இதனால் கோபி இனியாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு போக முடிவு செய்ய எல்லோரும் தடுக்க முயற்சி செய்தும் இனியா அப்பாவுடன் செல்வதில் உறுதியாக இருக்கிறாள். இதனால் கோபி இனியா உடன் ராதிகா வீட்டுக்குள் நுழைய இதை பார்த்ததும் ராதிகா அதிர்ச்சி அடைகிறாள். இனியா இனிமே இங்கதான் இருக்கப் போகிறாள் என சொல்ல ராதிகா மறுப்பு தெரிவிக்க முடியாமல் சரி என சொல்கிறாள்.

பிறகு ராதிகா இனியாவின் தோளில் கை வைத்து உட்காரு என சொல்ல இனியா கையை தட்டி விடுகிறாள். பிறகு கோபி இனியாவுக்கு ஸ்நாக்ஸ் ஏதாவது எடுத்து வந்து கொடுக்க சொல்ல ராதிகா கிச்சனுக்கு போக கோபி இரண்டு மகள்களையும் உட்கார வைத்து பேசுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 17-11-22
baakiyalakshmi serial episode update 17-11-22