ராதிகாவால் கடுப்பான கோபி.. உற்சாகத்தில் கோபியின் அப்பா மற்றும் எழில்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கடந்த செவ்வாய் முதல் மெகா சங்கமம் என்ற பெயரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுடன் இணைந்து ஒளிபரப்பாகி வந்தது. ‌

இன்றைய எபிசோடில் விருது விழாவில் கோபியின் மனைவி என பாக்யாவை அழைத்ததால் ராதிகா செம கடுப்பாகி ரூமுக்கு வந்து கோபியிடம் சண்டை போடுகிறார். எல்லாம் நீங்களும் சேர்ந்து திட்டம் போட்டு தான் இதெல்லாம் பண்றீங்க என சந்தேகப்படுகிறார். அப்படியெல்லாம் எதுவும் இல்லை என கோபி புரிய வைக்க முயற்சி செய்ய அப்போ அவங்களுக்கு எப்படி அந்த பங்க்ஷன் நடக்கிறது தெரியும் என கேட்க மோகன் சொல்லி இருப்பான் அவனுக்கு எல்லோரையும் நல்லா தெரியும் என சொல்கிறார்.

கோபியின் மனைவியை மேடைக்கு அழைக்கிறோம் என சொல்லும் போது நான் ஆசை ஆசையாக எழுந்து நின்றேன். ஆனால் அவங்க பாக்கியாவை கூப்பிட்டுகிட்டு போனாங்க. நான் எந்த விதத்தில குறைந்து போயிட்டேன்? என ராதிகா சத்தம் போட அவனுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியாது என கூறுகிறார். ஏன் நீங்க சொல்ல வேண்டியது தானே ராதிகா தான் மனைவின்னு என்ன கேட்க சொல்றதுக்கு நேரம் கிடைக்கல என கோபி கூறுகிறார். இது எல்லாம் தெரிந்து தான் என்னை பங்ஷனுக்கு வர வேண்டாம் என்று சொன்னீர்களா? என கேட்க கோபி ரொம்ப படுத்தர என சத்தம் போட யாரு படுத்தரா? ராதிகா இன்னும் கோபமாகிறார்‌.

இதுவே நான் விருது வாங்குனா உங்களை ஒரு ஓரமா உட்கார வச்சுட்டு புருஷனு வேற ஒருத்தனை அழைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என கேட்க கோபி ராதிகாவை அடிக்க கை ஓங்குகிறார். சும்மா சொன்னதுக்கு உங்களுக்கு எப்படி இருக்கு நேர்ல பார்த்த எனக்கு எப்படி இருக்கும் என ராதிகா சொல்ல உன்கிட்ட பேச முடியாது நான் போறேன் என கோபி ரூமை விட்டு வெளியே வர, போயிடுங்க அப்படியே போயிடுங்க திரும்ப வராதீங்க என ராதிகா சத்தம் போட இது எல்லாம் மூர்த்தியும் எழிலும் கேட்டு சிரிக்கின்றனர்.

அடுத்ததாக எல்லோரும் நன்றாக அமர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சந்தோஷமாக இருக்க இதை கோபி பரிதாபமாக பார்க்க அப்போது அங்கு வரும் அவருடைய அப்பா என் குடும்பம் எவ்வளவு சந்தோஷமா இருக்கு பாரு, நரகத்தில் இருக்கிற மாதிரி சொர்க்கத்தை தேடி போறேனே போனீங்க ஒரே வாரத்துல சண்டை என காரி துப்புகிறார். இனிமேதான் உனக்கு நரகம் என்றால் என்ன என்று தெரியும், ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் நீ நரக வாழ்க்கையை அனுபவிக்க போற. அப்படி நடக்கலனா நான் என் பெயரை மாத்திக்கிறேன் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்து கணவன் மனைவி புரிதலை மதிப்பிடும் வகையில் போட்டி ஒன்று நடக்க அதில் கோபியின் அப்பா அம்மா பங்கேற்று பத்துக்கு பத்து மதிப்பெண் வாங்குகின்றனர். அதேபோல் கண்ணனின் ஐஸ்வர்யாவும் பங்கேற்று ஐஸ்வர்யா 9 மதிப்பெண்ணும் கண்ணன் 7 மதிப்பெண் வாங்குகின்றனர்.

அதன் பிறகு மூர்த்தி, தனம் ஜோடிக்கு கோபி ராதிகா ஜோடிக்கும் போட்டி நடைபெறுகிறது. மூர்த்தி தனம் ஜோடி பத்துக்கு பத்து மதிப்பெண் வாங்க கோபி ராதிகாவை பற்றி புரிதலில் ஜீரோ மதிப்பெண் வாங்குகிறார்.

இதில் ராதிகா இன்னும் காண்டாகி ரூமுக்கு வந்து ஊருக்கு கிளம்ப கோபி எதுவும் பேசாமல் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். இந்தப் பக்கமும் எல்லோரும் ஊருக்கு கிளம்ப இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அதேபோல் மெகா சங்கமமும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

baakiyalakshmi serial episode update 19-10-22
jothika lakshu

Recent Posts

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட காவியா அறிவுமணி..!

இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…

6 days ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…

6 days ago

நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

6 days ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்..!

கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…

6 days ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி எடுக்க போகும் முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…

7 days ago

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…

7 days ago