தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ஹாலில் இருக்க கிச்சனில் பாக்யா சமைத்துக் கொண்டிருக்கிறார். உடனே ஈஸ்வரி வந்து கோபியிடம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஏழு பேர் வராங்க நம்ம வீட்ல 14 பேர் இருக்காங்க 20 பேருக்கு சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வந்துரு கோபி என்று சொல்லி விட்டு, இந்த வீட்ல யாரும் இதை தடுக்க கூடாது இந்த நிச்சயம் நடந்தே ஆகணும் என்று சொல்ல பாக்கியா கிச்சனிலிருந்து கோபமாக வந்து ஈஸ்வரியிடம் உங்களுக்கு எத்தனை வாட்டி சொல்றது நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீங்க இந்த முடிவு எடுத்திருக்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்கிறார். இனியாவுக்கு எது நல்லதோ அதை தான் நாங்க செய்கிறோம் என்று சொல்ல உங்கள விட இனியாக நான் பெத்தவ எனக்கு தெரியும் இந்த விஷயத்துல நீங்க தலையிடாதீங்க என்று சொல்லுகிறார்.
உடனே கோபி நான் மாப்பிள்ளை பற்றி விசாரிச்சேன் சொந்தக்காரங்க கிட்ட கேட்டேன் நல்ல பையன் என்று சொல்றாங்க நம்ம என்ன இப்பவேவா கல்யாணம் பண்ண போறோம் நிச்சயம் மட்டும் தான் இனியாவோட சம்மதத்தோட தான் கல்யாணம் பண்ண போறோம் என்று சொல்ல, அதற்கு பாக்யா இதைவிட நல்ல பையன் எல்லாம் கிடைப்பான் அவை இப்போதைக்கு படிக்கட்டும் என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி நான் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை வர சொல்லிட்டேன் அவங்க மட்டும் வராமல் போயிட்டாங்கனா நான் செத்துருவேன் என்று மிரட்ட உடனே பாக்யா செத்துப் போங்க என்று சொல்ல குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.என்ன சொன்ன என்ன சொன்ன என்று சொல்லிவிட்டு ஈஸ்வரி அப்ப நான் செத்துப் போனா கூட உனக்கு பிரச்சனை இல்லையா என்று கேட்க சும்மா எத்தனை நாளைக்கு இதை வச்சு நீங்க பிளாக் மெயில் பண்ணிக்கிட்டு இருப்பீங்க அவங்க வந்தாங்கன்னா அவங்க வீட்டை விட்டு நான் வெளியே போக சொல்லுவேன் இது கண்டிப்பா நடக்கும் என்று சொல்ல அது எப்படி நடக்குதுன்னு நானும் பாக்குறேன் என்று சொல்லுகிறார். நான் வந்தவங்கள யாரு இவங்க எல்லாம் கேட்க மாட்டேன் என்று சொல்ல கோபி இந்த நிச்சயம் கண்டிப்பா நடக்கும் என்று சொல்ல பாக்கியம் நடக்காது என்று உறுதியாக சொல்லி பார்க்கலாம் என இருவரும் சவால் விடுகின்றனர்.
மறுபக்கம் இனியா கிச்சனில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க அமிர்தா வருகிறார். வருத்தப்படாத இனியா அம்மா எல்லாம் பார்த்துப்பாங்க என்று சொல்ல அதற்கு இனியா எனக்காக அம்மா எவ்வளவு கஷ்டப்படுறாங்க நினைக்கும் போது எனக்கு வருத்தமா இருக்கு எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா அக்கா என்று கேட்க என்னன்னு சொல்லு என்று கேட்கிறார். எனக்கு போன் வேணும் என்று சொல்ல எதற்கு என்று கேட்க ஒரு போன் பண்ணிட்டு தரேன். என்று சொல்லுகிறார் யாருக்கு ஆகாஷ்கா என்று அமிர்தா கேட்க இல்லை என்னோட பிரண்டுக்கு என்று சொல்லுகிறார்.அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி வந்துவிட இனியா நீ போய் ரெடியாக இரு என்று சொல்லி அனுப்பிவிட்டு அவகிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்க அவ மனசு மாத்த பாக்குறியா போய் வெண்ணீர் போடு என்று கிச்சனுக்கு அனுப்புகிறார் உடனே மேலே சென்ற இனியா ரூமில் தனியாக யோசித்துக் கொண்டிருக்க அங்கு ஒரு மொபைலில் சார்ஜர் போட்டு இருப்பதை பார்த்து அதை எடுத்து போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து எனக்கு விருப்பம் இல்லாமல் நிச்சயதார்த்தம் செய்யப் போறாங்க இது எப்படியாவது நீங்க தடுக்கணும் என்று சொல்லி வீட்டு அட்ரஸ் கொடுக்கிறார். பிறகு இனியா தானாகவே டிரஸ் போட்டு மேக்கப் பண்ணி ரெடியா ஆக குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் பாக்யா பாட்டி சொல்றாங்கன்றதுக்காக நீ இதை பண்ணாத இனியா என்று சொல்ல இதுக்கு மேல எனக்காக யாரும் எதுவும் பேச வேண்டாமா? ரெண்டு நாளா எனக்காக பேசினீங்க சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க நீங்கதானே சொன்னீங்க என்னோட லைஃப்ல நான் முடிவெடுக்கணும்னு நானே பாத்துக்கிறேன் எனக்காக யாரும் பேச வேண்டாம் என்று சொல்ல என்ன நடந்திருக்கும் என்று தெரியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.
பிறகு மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்துவிட இனியும் கீழே இறங்கி சந்தோஷமாக வருகிறார் பிறகு என்ன நடக்கிறது இனியா நிச்சயம் நடக்கிறதா? போலீஸ் வருகிறதா? இல்லையா?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
