தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனிய கோபியுடன் ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வரும்போது எனக்கு உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு என சொல்ல கோபி சீக்கிரம் உன்னை கூட்டிட்டு போய் விடுகிறேன் என சொல்கிறார். இப்போ என்ன எங்கயாச்சும் வெளிய கூட்டிட்டு போங்க என இனியா கேட்க வீட்ல எல்லாரும் தேடுவாங்க இன்னொரு நாள் போகலாம் என கோபி சொல்ல இனியா அடம் பிடிக்கிறார்.
பிறகு பாக்கியாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிவிட்டு இனியா போனை கட் செய்து விட்டு கோபியுடன் வெளியே செல்ல கோபி அவளை ராதிகா வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். இனியா இது யார் வீடு என கேட்க அதற்குள் மயூரா உள்ளே இருந்து வெளியே வந்து இனியாவை பார்த்ததும் வாங்க இனியா அக்கா உங்கள பாத்து எவ்வளவு நாள் ஆயிடுச்சு திரும்பவும் நான் அதே ஸ்கூல்ல சேர்ந்துட்டேன் என வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்.
இனியா தயக்கத்தோடு உள்ளே செல்ல ராதிகா இனியாவை பார்த்ததும் நலம் விசாரித்து என்ன சாப்பிடுற என கேட்க இனியா எதுவும் வேண்டாம் என குறிப்பிடுகிறார். பிறகு இனியா அங்கிருந்து போகலாம் என சொல்லி கிளம்பி விடுகிறார்.
ஒரு பக்கம் பாக்கியா வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட இன்னொரு பக்கம் எழில் ஆபீசை காலி செய்யும் வேலையில் இருக்க அங்கு வந்த அமிர்தா அவனுக்கு ஆறுதல் கூற எழில் அமிர்தாவின் கையைப் பிடித்துக் கொள்ள இதை தயாரிப்பாளரின் மகள் பார்த்துவிட்டேன் பிறகு சதீஷ் இடம் அவங்க ரெண்டு பேருக்கும் என்ன ரிலேஷன்ஷிப் என கேட்க இருவரும் காதலிப்பதாக சொல்கிறார்.
அடுத்ததாக எழில் தயாரிப்பாளரை சந்தித்து எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்து திரையுலகில் அறிமுகப்படுத்தி வச்சது நீங்கள்தான். இரண்டாவது வாய்ப்பையும் கொடுத்தீங்க ஆனால் என்னால் அதை தொடர முடியவில்லை. அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன் என சொல்ல இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 20-09-22