Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகா வீட்டிற்குச் சென்ற பாக்கியா.. மயூ சொன்ன வார்த்தை இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 21-06-22

ராஜேஷ் கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக ராதிகா அவருடைய அண்ணன் மற்றும் அம்மா மூவரும் ஸ்டேஷனுக்குச் சென்று அதற்கு அவர்கள் கூறிய கூப்பிட்டு விசாரித்து பாருங்கள் என கூற கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கோபி நானும் ராதிகாவும் கல்யாணம் பண்ணிக்க போகிறோம் எனக்கு அடுத்த மாதம் விவாகரத்து கிடைத்து விடும் அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். மயூராவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் இவர் பொய் சொல்கிறார் என சொன்ன பிறகு கோபி மயூவுக்கு போன் போடுகிறார்.

போனில் பேசிய மயூ கோபி இடம் மிகவும் அக்கறையாக அம்மாவை எப்படியாவது வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. உங்க கிட்ட பேசாம எனக்கு கஷ்டமா இருக்கு சீக்கிரம் வீட்டுக்கு வாங்க என பேச இதைக்கேட்ட போலீஸ் ராஜேஷ் மீதுதான் தவறு இருப்பதை புரிந்து கொள்கின்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என லெட்டர் எழுதி கொடுத்து விட்டு கிளம்புங்க என போலீஸ் கூறுகிறார். இதனால் ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

இந்தப் பக்கம் பாக்கியா ராதிகா வீட்டுக்குச் சென்று இருக்க அப்பா கம்ப்ளைண்ட் கொடுத்ததால் அம்மா பாட்டி மாமா என மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விடுகிறார்கள் என சொல்லி அழ இதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

Baakiyalakshmi Serial Episode Update 21-06-22
Baakiyalakshmi Serial Episode Update 21-06-22