Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபி சொன்ன வார்த்தை, கோபப்பட்ட இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

BaakiyaLakshmi Serial Episode Update 21-07-25

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இனியாவை நினைத்து சாமி கும்பிட்டு விட்டு வர குடும்பத்தினர் அனைவரும் கோர்ட்டுக்கு கிளம்புகின்றனர் பாட்டி கூட செழியன் இருக்க சொல்லில் நானும் வருவேன் என சொல்லி முடிவெடுக்கிறார் ஈஸ்வரி இனியாவை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லுகிறார். பிறகு அனைவரும் காரில் கிளம்ப இனியா பாக்யா மீது சாய்ந்து கொண்டு வர பயப்படாத இனிய குட்டி என்று சொல்லுகிறார் தண்ணீர் இருக்கா என்று கேட்க இல்லை என்று சொன்னவுடன் ஏழில் காரை நிறுத்தி தண்ணி வாங்கப் போக கோபி காரில் இருந்து இறங்கி இனியா பக்கத்தில் உட்கார்ந்து வருகின்றனர்.

கொஞ்ச நேரத்தில் கோர்ட்டுக்கு வந்து இறங்க உள்ளே நின்று கொண்டிருக்கின்றனர் சிறிது நேரத்தில் சுதாகர் மற்றும் நித்தி சீரும் வரும் வர முதலில் ஒரு கேஸ் நடக்கிறது பிறகு இவர்களை இருவரையும் கூப்பிட கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆகுது என்று கேட்கின்றனர் ரெண்டு மாசம் என்று சொல்ல ரெண்டு மாசத்திலேயே விவாகரத்தா என்று கேட்க இனியா வக்கீல் அதுல நாங்க காரணத்தை சொல்லி இருக்கோம் என்று சொல்ல நிதிஷ் வக்கிலிடம் அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்க நாங்க அதற்கான பதிலை கொடுத்து இருக்கிறோம் என்று சொல்லுகிறார் உடனே கொஞ்சம் கூட யோசிக்காத நீதிபதி அடுத்த மாசம் 15ஆம் தேதி வாங்க என்று சொல்லிவிடுகிறார் பிறகு இவர்கள் வெளியில் வந்து விடுகின்றனர். வக்கீல் கோபியை கூப்பிட்டு பேச வேண்டும் என அழைத்துச் செல்ல பாக்யாவும் இனியாகவும் வெளியில் காத்துக் கொண்டிருக்க எழில் அமிர்தவுடன் போன் பேசிக் கொண்டிருக்கிறார்.

சுதாகர் வந்து இனியாவிடம் பேச வர இனியா எதுவும் பேசாமல் காருக்கு போவதாக சொல்லி சென்று விட எழில் மற்றும் பாக்யா விடம் இனியாவுக்கு என் கூட பேசறது எல்லாம் விருப்பம் இல்லை போல என்று சொல்ல இனியாவுக்கு மட்டும் இல்லை எங்களுக்கும் உங்க கூட பேச விருப்பமில்லை இது கோர்ட் என்று பார்க்கிறேன் என்று சொல்ல சுதாகர் அமைதியாக சென்று விடுகிறார். மறுபக்கம் இனியா காருக்குள் போக விடாமல் நித்திஷ் கூப்பிட்டு நெனச்ச மாதிரியே டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டு சந்தோஷம் தானே என்று கேட்கிறார்.

அப்புறம் என்ன பிளான் என்று சொல்ல நான் என்ன பண்ணா உனக்கு என்ன என்று கேட்கிறார் நான் சொல்லவா அந்த ஆகாஷ் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்ப அப்படித்தானே என்று சொல்ல இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். சொல்லுடி என்று சொல்ல வாடி போடின்னு சொல்ற வேலையெல்லாம் வச்சுக்காத என்று சொல்ல இப்பவும் நீ என் பொண்டாட்டி தான் என்று சொல்ல அந்த வார்த்தையை கேட்டாலே அருவருப்பா இருக்கு என்று சொல்லுகிறார் அவன் பொண்டாட்டின்னு சொல்லும்போது இனிக்குது என் பொண்டாட்டி ன்னு சொல்லும்போது அருவருப்பா இருக்குதா என்று கேட்கிறார்.

நிதிஷ் ஆகாஷ் இனியாவை சேர்த்து வைத்து பேச டென்ஷன் ஆகி நித்திஷை அறைந்து விடுகிறார். பிறகு என்ன நடக்கிறது? என்ன பேசுகின்றனர்? குடும்பத்தினர் என்ன சொல்லுகின்றனர்? அதற்கு இனியாவின் பதில் என்ன ?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 21-07-25
BaakiyaLakshmi Serial Episode Update 21-07-25