Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிறந்தநாளுக்கு சம்மதித்த ராமமூர்த்தி, கோபிக்கு ஷாக் கொடுத்த ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

BaakiyaLakshmi Serial Episode Update 21-08-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரியிடம் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று குடும்பத்தார் கேட்க ஈஸ்வரி சம்மதம் தெரிவிக்கிறார். ராமமூர்த்தியிடம் தெரிவிக்க வேண்டாம் என மறுத்த ராமமூர்த்தி குடும்பத்தார் வற்புறுத்தியதால் பிறகு உங்க இஷ்டம் என்று சம்மதித்து சென்று விடுகிறார்.

மறுபக்கம் கோபி மயூவிடம் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ராதிகா காபி வேணுமா எடுத்துட்டு வரவா என்று கேட்க எடுத்துட்டு வா என்று சொல்கிறார். பிறகு ஒரு குட் நியூஸ் என்று சொல்லி ஜெனி கர்ப்பமாக இருப்பதை ராதிகாவிடம் சொல்கிறார். ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க, உங்க பசங்களுக்கு உன் குடும்பத்துக்கு ஏதாச்சும் ஒன்னுனா சோகமா இருக்கீங்க இல்லன்னா சந்தோசமா இருக்கீங்க என்று கோபப்படுகிறார். பிறகு மயூவிற்கு சாரி சொல்லிவிட்டு கட்டிப்பிடித்து கொள்கிறார் ராதிகா.

மறுபக்கம் ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்கு யாரையெல்லாம் கூப்பிடனும் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்க செல்வி கோபி சார கூப்பிடுவீங்களா என்று கேட்கிறார் அதற்கு ஈஸ்வரி கோபி சார்னு எனக்கு யாரையும் தெரியாது நான் எதுக்கு கூப்பிட போறேன் என்று சொல்கிறார்.

பாக்கியாவிடம் எழிலை கூப்பிடுவியா இல்லையா என்று கேட்க எழிலுக்கு தெரியும் அவனுக்கு எதுக்கு சொல்லணும் அவனே வருவான் என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விடுகிறார்.

அமிர்தா நிலாவிற்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிற அந்த நேரம் பார்த்து ஏழில் வருகிறார் வீடு செட் ஆச்சா என்று கேட்க மூன்று வீடு பார்த்தோம் ஆனால் எதுவும் செட் ஆகல இன்னும் இரண்டு நாட்களில் பார்த்து விடலாம் என்று சொல்லுகிறார். அம்மா போன் பண்ணாங்களா என்று கேட்க நைட் பண்ணாங்க என்று சொல்லுகிறார். ஆனா எனக்கு பண்ணவே இல்லை என்று சொல்லுகிறார்.

அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி போன் பண்ண எழில் எடுக்க மறுத்தும் அமிர்தா எடுத்து விடுகிறார். ஈஸ்வரி எழிலிடம் என்ன பேசினார்? அதற்கு எழிலின் பதில் என்ன? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 21-08-24
BaakiyaLakshmi Serial Episode Update 21-08-24