தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியாவை பழனிசாமி வெளியே கூப்பிட கோபி கிச்சனுக்கு வந்து பாக்யாவை போகக்கூடாது என தடுக்க முயற்சி செய்ய அங்கு இருந்த ராதிகா கரண்டியை காட்டி மிரட்டி கோபியை அமைதியாக்குகிறார்.
பிறகு பாக்கியா பழனிச்சாமி உடன் வெளியே கிளம்பி வருகிறார். அதனைத் தொடர்ந்து இங்கே கோபி ராமமூர்த்தி இடம் இதெல்லாம் நல்லாவே இல்லப்பா அவன் கூட எதுக்கு நீங்க அனுப்பி வச்சீங்க என்று கேட்க ராதிகா அங்கு வந்து பெரியவங்களுக்கு அத பத்தி கவலை இல்லை உங்களுக்கு என்ன பிரச்சனை பேசாம போங்க என திட்ட கோபி வாயை மூடி கொள்கிறார். பிறகு ராமமூர்த்தி போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு என்ன பாட்டு பாடி கோபியை கடுப்பாக்கிறார்.
இங்கே பழனிச்சாமி பாக்கியவை கூட்டிச்சென்று காண்ட்ராக்ட் எடுத்தவரை வர வைத்து பேசுகிறார். அவர் மேலும் ஒரு லட்சம் சேர்த்துக் கொடுத்தால் கொடுத்து விடுவதாக சொல்கிறார். பாக்கியா அவ்வளவு பணம் முடியாது என அவரிடம் பேசி 50 லட்சத்தை குறைக்க 1.5 லட்சம் ரூபாய்க்கு கீழே குறைக்க முடியாது என கூறி விடுகிறார். பிறகு பழனிச்சாமி இன்னைக்கு சாந்தத்துக்குள்ள பணத்தை கொடுத்துடுறோம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.
வீட்டில் கோபி ஈஸ்வரியிடம் பாக்யா பழனிச்சாமி உடன் சென்றதைப் பற்றி பேசி இதெல்லாம் ரொம்ப தப்பா இருக்கு என கொளுத்தி விட முயற்சி செய்ய ஈஸ்வரி அந்த தம்பி நல்லதம்பி என பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசி ஆப்பு வைக்கிறார். இங்கே பாக்கியம் மற்றும் பழனிச்சாமி இருவரும் கவர்மெண்ட் ஆபீஸ் வந்து காண்ட்ராக்ட் எடுக்க கட்டிய பணத்தை கேட்க அவர் இப்போதைக்கு தர முடியாது அதுக்குன்னு ஒரு புரொசிஜர் இருக்கு என அதிர்ச்சி கொடுக்கிறார்.
பிறகு பழனிச்சாமி உயர் அதிகாரியிடம் பேசி உடனடியாக பணத்தை திருப்பி தரவைக்க ஏற்பாடு செய்கிறார். இரண்டு நாட்கள் கழித்து வந்து பணத்தை வாங்கிக்கோங்க என்று சொல்ல இப்போதைக்கு பணத்தை நான் தரேன் என பழனிச்சாமி பாக்யாவிடம் பேசி ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.