தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் ஷூட்டிங்காக தாய்லாந்து கிளம்ப குடும்பத்தினர் அனைவரும் அவரை வழி அனுப்ப காத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வரி இப்ப கூட பாக்கியா எங்க போனா தெரியல என்று பேசிக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் பாக்யா கோவிலுக்கு போயிட்டு வந்து விபூதி வைத்துவிட்டு நல்லபடியா போயிட்டு வாங்க சந்தோஷமா இருங்க என்று சொல்லுகிறார். இந்த நேரத்துல உன் கூட இல்லாம இருக்கறது கஷ்டமா இருக்குமா எழில் சொல்ல இனி அங்க போய் சந்தோஷமா இருக்கிறது தான் எனக்கு சந்தோஷம் என்று சொல்லுகிறார்.
பிறகு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அவரை அனுப்பி வைக்க கோபி கெளம்புறேன்னு சொல்ல ஈஸ்வரி கொஞ்ச நேரம் கழிச்சு போக கோபி என்று என் சொல்ல அந்த நேரம் பார்த்து பாக்கியராஜ் காபி கொடுக்கிறார். ஈஸ்வரி ரெஸ்டாரண்டுக்கு போலயா என்று கேட்க போகல அத்தை என்று சொல்லுகிறார்.அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு போலீஸ் வந்து நிற்க பாக்கியா என்ன விஷயம் என்று கேட்க இங்க பாக்கியலட்சுமி யார் என்று கேட்கிறார்.
நான்தான் பாக்கியலட்சுமி என்று சொல்ல ஏமா ஹோட்டல் நடத்தினால் அமைதியாக நடத்த மாட்டீங்களா ஏதாவது பிரச்சினை பண்ணுவிங்களா என்று கேட்க நான் என்ன சார் பிரச்சனை பண்ண என்று சொல்ல அந்த கவுன்சிலரை நீங்க அடிச்சதா கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காரு என்று சொல்ல அவர்தான் ஃபர்ஸ்ட் வம்பு இழுத்தாறு அதுக்கு தான் என் பையன் அப்படி பண்ணான் என்று சொல்ல அப்ப நாங்க எதுக்கு இருக்கோம் என்று கேட்கிறார். உடனே ஜெனி மற்றும் செழியன் இருவரும் வந்து நிற்க எங்க செழியன் என்றது நீதான என்று சொல்லி அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிட குடும்பத்தில் இருப்பவர்கள் அனுப்ப மறுக்கின்றனர் எதுவா இருந்தாலும் நீங்க ஸ்டேஷன்ல வந்து பேசிக்கோங்க என்று சொல்லிவிட்டு செழியனை அழைத்துச் செல்ல ஜெனி ஈஸ்வரி கண்கலங்கி அழுகின்றனர். உடனே பாக்யா போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்ப ஈஸ்வரி இப்ப நீ எதுக்கு போற என்று கேட்கிறார் உன் வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்ட நீ அவன ஜெயிலுக்கு அனுப்பிடுவ நீ போகத் தேவையில்லை என்று சொல்ல, இல்ல அத்தை நான் செழியனை வெளியே கூட்டிட்டு வந்துருவேன் என்று சொல்லுகிறார்.
போது ஆன்ட்டி நீங்க எதுவுமே பண்ண வேண்டாம் நீங்க பண்ண வரைக்கும் போதும் நீங்க ரொம்ப செல்பிஷா இருக்கீங்க என்ற ஜெனி பாக்யா மீது கோபமாக பேச பாக்யா பதில் பேச வர கோபி வேணும் பாக்கியா அமைதியா இரு என்று சொல்லிவிட்டு கோபி என் பையன பொறுப்பா கூட்டிக்கிட்டு வர வேண்டியது என்னோட பொறுப்பு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
ஜெனி அழுது கொண்டே இருக்க ஈஸ்வரி கோபி கண்டிப்பாக கூட்டிட்டு வந்துருவோம். அழாத ஜெனி என்று சொல்லிவிட்டு பாக்கியா கிச்சனில் இருக்க அங்கு சென்று நீ யாரையுமே நிம்மதியா இருக்க விட மாட்டியா நீ எப்ப ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கிறது என்று சொன்னியோ அப்பவே நான் நிறுத்திருந்தனா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது என்று சொல்லி பேசிக் கொண்டிருப்ப அந்த நேரம் பார்த்து ஜெனியின் அப்பா வந்து நிற்க ஜெனி அழுகிறார் உடனே பாக்யா வந்து நிற்க ரெஸ்டாரன்ட்ல பிரச்சனைனா யாரையாவது சமாளிக்க பார்க்கணும் இப்ப இது மாதிரி பண்ணா கஷ்டப்படுறது என்னோட பொண்ணு மாப்பிள்ளையும் தான் அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது அதுக்காக தான் உங்களை அந்த வீட்டுக்கு போகலாம்னு சொன்ன கேக்குறீங்களா என்ற ஜெனியை கேட்கிறார் சரி கவலைப்படாத நம்மளோட வக்கீலை கூட்டி போறேன் எப்படியாவது மாப்பிள்ளை கூட்டிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
கொஞ்ச நேரத்தில் எழில் பிளைட் ஏரியாச்சு இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பிடும் என்று மெசேஜ் போட ஈஸ்வரி எழிலை வீட்டுக்கு வர சொல்லுகிறார் ஆனால் பாக்யா அவ வந்து என்ன பண்ணப் போறான் என்று சொல்லிவிட்டு சரி நீ போயிட்டு போன் பண்ணு என்று சொல்லி வாய்ஸ் நோட் அனுப்புகிறார். யார் என்ன சொன்னாலும் கேட்கவே கூடாது என்ற முடிவில் நீ இருக்க என்று திட்ட பாக்யா எதுவும் பேசாமல் சென்று விடுகிறார். கோபி வீட்டுக்கு வந்து செழியனை வெளியே எடுக்கிறது ரொம்ப கஷ்டம் என்று சொல்லி பேசிக்கொண்டே இருக்க அந்த நேரம் பார்த்து சுதாகர் வருகிறார். அவர் என்ன சொல்லுகிறார்?அதற்கு குடும்பத்தார் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
