தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் இதுவரை நடந்து முடிந்த ரவுண்டில் பாக்கியா மூன்று ரவுண்டிலும் கோபி இரண்டு ரவுண்டிலும் ஜெயித்ததால் மீதமுள்ள இரண்டு ரவுண்டிலும் இருவர் மட்டுமே போட்டி போட உள்ளதாக அறிவிக்கின்றனர்.
மறுபக்கம் இனியா பப்புக்கு வர அவளது பிரண்ட்ஸ் சீனியர்களுடன் சேர்ந்து பீர் குடிக்க இனியா பதற்றம் அடைகிறார். பிரியா இனியவை கூல் செய்து டான்ஸ் ஆட அழைத்து வருகின்றனர். பாக்கியா இனியாவுக்கு போன் செய்ய இனியா போன் எடுக்காததால் செழியனுக்கு போன் செய்து இனியா பற்றி விசாரிக்க செழியன் நான் இங்கதான் இருக்கேன் நீ பயப்படாதமா என்று சொல்கிறார். பிறகு போட்டி குறித்து விசாரிக்க இங்கு நடந்த விஷயங்களை சொல்கிறார்.
பப்பில் சீனியர்கள் இனியாவை பார்த்து சூப்பராக இருப்பதாக சொல்லி போன் நம்பரை கேட்க அவளது நண்பர்கள் கொடுக்கு மறுக்கின்றனர்.
பாக்கியா போன் பேசி முடித்துவிட்டு வந்ததும் இனியா அங்க பாரு அவன் இன்னொரு புது ஆள கூட்டிட்டு வந்திருக்கான் என்று சொல்லி நடுவர்களிடம் சென்று இது குறித்து கேட்டு சண்டையிட கோபி முறையாக பர்மிஷன் வாங்கி தான் கூட்டிட்டு வந்ததாக சொல்லி விடுகின்றனர். வேணுமா நீங்க கூட ஆள மாத்திக்கலாம் என்று சொல்கின்றனர்.
அதன் பிறகு ஆறாவது போட்டி நடந்து முடிய கோபி டீம் பைவ் ஸ்டார் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சமைத்து இருப்பதாக பாராட்டுகின்றனர். பாக்கியா மண் மனம் மாறாமல் சமைத்திருப்பதாக சொல்கின்றனர். இறுதியாக கோபி ஒரு மார்க் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாக அறிவிக்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.