தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமிர்தா நிலா பாப்பாவை வைத்துக்கொண்டு ஷோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்க சாயங்காலம் வரைக்கும் பார்க்கலாம் அவர்கிட்ட கொண்டு போய் காட்டிட்டு வாங்க என்று ஈஸ்வரி சொல்கிறார்.
பாக்கியாவும் சோகமாக இருக்க எழில் என்னாச்சு என்று கேட்க எதுவும் இல்லை என்று சொல்லி சமாளிக்க ராமமூர்த்தி கேன்டினில் நடந்த விஷயத்தை நினைச்சிட்டு இருக்காதம்மா என்று சொல்கிறார். ஒரே மாசத்துல அடுத்தடுத்து இரண்டு முறை தப்பு நடந்தது எல்லாம் என்னுடைய தப்புதான் நிறைய வேலை பார்க்கிறதுனால சரியா கவனம் செலுத்த முடியல என்று சொல்லி ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் விட்டுவிடலாம் என்று முடிவெடுத்து இருப்பதாக சொல்கிறார்.
ஈஸ்வரி அதுவும் நல்ல விஷயம் தான் நைட்டு 12 மணி வரைக்கும் வேலை பார்க்கிற திரும்பவும் காலையில நாலு மணிக்கு எல்லாம் எழுந்துக்கிற உனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும் என்று சொல்கிறார். எழில் கிளாஸ்ஸ விட்டுடாதனு சொல்ல முடியல ஆனா உனக்கு கஷ்டமா இருக்கு என்று வருத்தப்படுகிறார்.
அதன் பிறகு ரூமுக்குள் எழில் நிலா பாப்பாவிற்கு ஜுரம் அப்படியே இருப்பதால் அமிர்தாவிடம் சொல்லி வருத்தப்பட்டு கண்கலங்குகிறார். ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு வந்த பாக்கியா இன்னைக்கு கடைசி நாட்கள் என்பதால் கண்கலங்க பழனிச்சாமி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நாங்க உங்களுக்கு சொல்லித்தரோம் அதுவும் இல்லாம நீங்க ஓரளவுக்கு நல்லாவே இங்கிலீஷ் பேச கத்துக்கிட்டீங்க எழுதவும் செய்யறீங்க மத்த இடங்களில் இங்கிலீஷ் பயன்படுத்தவும் செய்யறீங்க அதனால நீங்க வந்த வேலை நல்லபடியா முடிஞ்சது என்று சொல்கிறார்.
அடுத்ததாக வீட்டுக்கு வந்த பாக்கியா இங்கிலீஷ் கிளாசை விட்டு விட்டதாகவும் அங்க இருப்பவர்களை மிஸ் பண்ணுவதாகவும் சொல்ல கரெக்டா பழனிச்சாமியும் லோபிதாவும் வீட்டிற்கு வருகின்றனர்.
வீட்டில் இவர்கள் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து இனியா வெளியில் பிரண்டுடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இனியாவை பார்த்து உள்ளே வரும் கோபி இது யார் வண்டி என்று கேட்க பழனிச்சாமி வந்திருக்கிறார் என்று இனியா சொல்ல என்ன விஷயம் என்று கேட்க அம்மா இங்கிலீஷ் கிளாஸ் விட்டுட்டாங்க அதனால இன்னைக்கு கிளாஸ்ல நடந்தது சொல்லிக் கொடுக்க வந்திருக்காங்க என்று இனியா கூறுகிறார்.
ஏன் விட்டுட்டா எதுக்கு விட்டுட்டா என்று கோபி கேள்வி கேட்க கேண்டீன்ல ஒரு பிரச்சனை ஆயிடுச்சு அதனால அங்க கவனம் செலுத்த இங்கிலீஷ் கிளாஸ் விட்டுட்டாங்க என்று சொல்ல பாக்கியாவுக்கு இது தான் ஆரம்பம் என்று கோபி சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.