தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா பாக்யாவுக்கு கங்கிராஜுலேசன் சொல்ல செல்வி பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்ப எதுக்கு கங்கிராஜுலேசன் என கேள்வி கேட்க எனக்கும் பாக்யாவுக்கு செட் ஆகல அதனாலதான் அந்த காண்ட்ராக்ட் கேன்சல் ஆகிவிட்டது.
எனக்கும் அவங்களுக்கும் ஒரு போட்டி அதுல நான் ஜெயிக்கணும்னு நினைப்பேன். ஆனா மத்த இடங்கள்ல பாக்கியம் தான் ஜெயிக்கணும் என்பது தான் என்னுடைய ஆசை என கூறுகிறார். இதைக் கேட்டு எனில் இவங்கள புரிஞ்சுக்கவே முடியலையே என கூறுகிறார்.
அதன் பிறகு செழியன் ஜெனி வீட்டில் வந்து காலிங் பெல் அடிக்க ஜெனி கதவை திறக்க செழியனின் கோலத்தை பார்த்து அதிர்ச்சி அடைய எதுவும் பேசாமல் சென்றுவிட செழியன் பின்னாடி வந்து மன்னிப்பு கேட்டு குழந்தையை பார்க்கிறார். செழியன் தனக்குள் இருக்கும் கவலையை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
அதன் பிறகு பாக்கியா ஜெனிக்கு தனக்கு கிடைத்திருக்கும் கான்ட்ராக்ட் குறித்து வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். தினமும் உன்னையும் பாப்பாவையும் ரொம்ப மிஸ் பண்றேன் என கூறுகிறார்.
அடுத்ததாக பாக்கியா தன்னுடன் வேலை செய்பவர்களை வீட்டிற்கு வரவைத்து பொருட்காட்சியில் என்னென்ன எல்லாம் செய்யலாம் என்று லிஸ்ட் போடுகிறார்.
அடுத்ததாக எழில் அமிர்தா மற்றும் நிலா பாப்பா ஆகியோர் ஜெனியை பார்த்த வீட்டிற்கு வருகின்றனர். நிலா பாப்பா ஜெனிமா அழுதீங்களா ஏன் இப்படி இருக்க எப்ப வீட்டுக்கு வருவ நம்ம வீட்டுக்கு போகலாம் என்று பேச ஜெனி கொஞ்சம் ஆறுதல் அடைகிறார். எழில் தன்னுடைய பங்கிற்கு சப்பாத்தி செஞ்சு கொடுங்க என்று கலாய்த்து ஆறுதல் செய்கிறார். அடுத்ததாக எல்லாம் சீக்கிரம் நல்லபடியா மாறும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து இவர்கள் கிளம்புகின்றனர்.
அதைத்தொடர்ந்து ராதிகா கோபி கூட்டிக்கொண்டு சூப்பர் மார்க்கெட் வந்து ஷாப்பிங் செய்து கொண்டிருக்க அங்கு பாக்கியா வந்து கடைக்காரரிடம் கேன்டீன் காண்ட்ராக்டிற்கு தேவையான பொருட்களை முதல் நாள் மட்டும் கடனாக கேட்க இதை கோபி பார்த்து தடுக்க முயற்சி செய்கிறார். அண்ணாச்சி கொடுக்க சம்மதம் தெரிவிக்க ராதிகா கோபியை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
