Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்யா வீட்டிற்கு எதிரே குடியேறிய கோபி..எழிலுக்கு வந்த கோபம் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

baakiyalakshmi serial episode update 25-10-22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி‌. இன்றைய எபிசோடில் கோபி எதிர் வீட்டுக்கு குடி வந்த அதிர்ச்சியில் பாக்கியா கிச்சனில் தனியாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்க அப்போது வரும் செல்வி எதிர் வீட்டுக்கு யாரோ புதுசா குடி வந்திருக்காங்க அதுவும் கல்யாணம் ஆனவங்கலாம். டிரைவர் இன்னொன்னு சொன்னாரு அதுதான் எனக்கு ஒரே சிரிப்பா வந்துடுச்சு. புதுசா கல்யாணம் ஆனவங்க எல்லாம் ஆனா குழந்தையுடன் வந்திருக்காங்கன்னு சொன்னாங்க அது எப்படி குழந்தை பிறக்கும் என செல்வி கேட்க அது யார் தெரியுமா இனி அப்பாவும் ராதிகாவும் தான் வந்து இருக்காங்க என சொல்ல செல்வி அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்து கோபி டிரைவரிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது செழியனை பார்த்ததும் டேய் எப்படிடா இருக்க என கோபி பேச முயற்சி செய்ய செழியன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறான். வீட்டுக்கு வந்து என்னிடம் இந்த விஷயத்தை சொல்ல அவளும் அதிர்ச்சி அடைகிறார். ராதிகா அங்கு வர என்ன உங்க வீட்டையே பார்த்து நின்னுகிட்டு இருக்கீங்க அவங்கள மிஸ் பண்றீங்களா? என கேட்க அதெல்லாம் இல்ல அது என் வீடு கிடையாது இதுதான் என் வீடு. நீதான சொன்ன அவங்க முன்னாடி நாம சந்தோஷமா வாழ்ந்து காட்டணும்னு அதுக்காகத்தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன் என கூறுகிறார்.

பிறகு வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது எழில் இனியா அரட்டை அடித்துக் கொண்டிருக்க செழியன் திடீரென அழ எல்லோரும் என்னை ஏது என விசாரிக்க கோபி எதிர் வீட்டுக்கு குடி வந்திருப்பதை சொல்ல அனைவரும் அதிர்ச்சி ஆகின்றனர். கிச்சனில் தேடிப் பிடித்து கத்தியை எடுக்க இன்னும் பேரதிர்ச்சி அடைகிறார்கள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 25-10-22
baakiyalakshmi serial episode update 25-10-22