தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இனியா இருவரும் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருக்க ஜெனி கருகிய தோசையை எடுத்து வைக்க என்னக்கா இது இது எப்படி சாப்பிடுவது என இனியா கூறுகிறார். ஈஸ்வரி பேசாம சாப்பிடு வேற என்ன பண்ண முடியும் என சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் செழியன் கோபியை அழைத்துக்கொண்டு கீழே வருகிறார்.
கீழே வந்த கோபி தனக்கு சாப்பாடு வேண்டாம் என கூறிவிட்டு ஈஸ்வரிடம் மன்னிப்பு கேட்க அவர் பாக்கியா திரும்பவும் இந்த வீட்டுக்கு வருவா, அப்பா அவளை கூப்பிட்டு வர போயிருக்காரு. அவளுக்கும் நிறைய வருத்தம் இருக்கும் கஷ்டம் இருக்கும் அவ சண்டை எல்லாம் போட மாட்டா.. ஆனால் அவளோட மனசையும் அவள் பக்கம் இருக்க நியாயத்தையும் புரிந்து நடந்துக்க என சொல்கிறார். அந்த ராதிகா எப்படின்னா போகட்டும் அவளை பத்தி கவலைப்பட வேண்டாம் திரும்பவும் தப்பான வேலைகளை செய்ய மாட்டேன் என சொல்லு என சொல்ல சரி மா என கோபி கூறுகிறார்.
அதன் பிறகு ராமமூர்த்தி வீட்டுக்கு வந்து பாக்கியா வரமாட்டேன்னு சொல்லிட்டா என சொல்ல அம்மா ரொம்ப ஓவரா பண்றாங்க என இனியா மற்றும் செழியன் இருவரும் சொல்ல ஈஸ்வரியின் பாக்கியா ரொம்ப தப்பு பண்றா நீங்க கூப்பிட்டு வரலனா எப்படி என சொல்ல அவ என்ன பார்த்து ஒரு கேள்வி கேட்டா. அவ கேட்ட கேள்விகளும் ஒரு நியாயம் இருந்தது என சொல்லி உங்களுக்கும் ஒரு பொண்ணு இருந்து இப்படி நடந்து இருந்தா அவளை அந்த வீட்டுக்கு போய் வாழ தான் சொல்லி இருப்பீங்களா என கூறிய விஷயத்தை சொல்கிறார்.
பிறகு கோபி திருந்த மாட்டான் என திட்டிவிட்டு உள்ளே எழுந்து சென்ற பிறகு கோபி ராதிகாவை ஒரு இடத்திற்கு வரவைத்து சந்தித்து அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். அப்போது ராதிகா டீச்சர் வீட்டுக்கு வந்திருந்தாங்க என சொல்ல அவ எதுக்கு அங்க வந்தா சண்டை போட்டாலும் என கேட்க வேற என்ன பண்ணுவாங்க என்ன துரோகின்னு சொன்னாங்க. என்ன அவங்க கூட பொறந்த தங்கச்சி மாதிரி பார்த்தாங்க அவங்க புருஷனை தான் லவ் பண்றேன்னு தெரியாம எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டாங்க. விஷயம் தெரிந்தால் அவங்க என்ன பண்ணுவாங்க அவங்களுக்கும் எவ்வளவு கஷ்டம் இருக்கும் என கூறுகிறார்.
ஆனால் கோபி பாக்கியா பற்றி எதையும் யோசிக்காமல் நீ மும்பைக்கு போகாத கொஞ்ச நாள் இங்கேயே இரு கண்டிப்பா இந்த பிரச்சனை எல்லாம் சரியா போயிடும். என் வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த சமயத்தில்தான் உன்னை பார்த்தேன் நீ வந்த பிறகு தான் என்னுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறியது. நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழலாம் என்பது போல பேச ராதிகா பதில் ஏதும் சொல்லாமல் நான் கிளம்புறேன் என கிளம்பி விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
