தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபியும் பாட்டி ஆகும் சண்டைபோட்டு கொண்டிருந்ததைப் பார்த்த ஈஸ்வரி நகைகளை எடுத்து வந்து பாக்கியாவிடம் கொடுத்துவிட்டு செல்கிறார். இப்போ உனக்கு சந்தோஷமா என பாக்கியா விடும் சத்தம் போட்ட கோபி அவருடைய அம்மா பின்னாடியே சென்று பேசுகிறார். ஆனால் அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடுவதால் கோபி மேலே சென்று விடுகிறார். பிறகு ஈஸ்வரிடம் சென்ற பாக்கியா இது வாங்கிக்கங்க அத நாங்க உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம். மாமா இப்படி இருக்கும் போது நாங்க பணத்தைப் பற்றி பேசி சண்டை போட்டிருக்க கூடாது என கண் கலங்குகிறார்.
இல்ல பாக்கியா இத நீயே வச்சுக்கோ நீ எவ்வளவு கஷ்டப்படுற ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகிறது அதை நீ எப்படி சமாளிக்கிரேனு நானும் பார்த்துகிட்டு தான் இருக்கேன். அதுக்காகத்தான் நான் இதை உன் கிட்ட கொடுத்தேன் நீ ரொம்ப கஷ்டப் படாத இதை வச்சுக்கோ. உங்க மாமாவே இப்படி இருக்கும்போது நகையை வைத்து நான் என்ன பண்ண போறேன் என சொல்ல பாக்கியா அதெல்லாம் பார்த்துக்கலாம் இத நீங்க வாங்கிக்கங்க என கூறுகிறார். உடனே ஈஸ்வரி என் மேல சத்தியமா இத நீ திருப்பி தரக்கூடாது என கூறி உள்ளே சென்று விடுகிறார்.
இந்தப்பக்கம் எழில் பீச்சில் அமிர்தாவை சந்தித்து பேசுகிறார். படத்தில் பாட அவரை ஊக்கப்படுத்தினார். அப்படி இந்தப்பக்கம் கோபி ராதிகா வீட்டில் இருக்க கோபிக்கு எதையோ செய்து கொடுக்கிறார் ராதிகா. சாப்பிட்டுப் பார்த்துவிட்டு சூப்பராக இருக்கு ஆனா நீ எதுக்கு கிச்சன்ல வேலை பண்ற எனக் கேட்கிறார். டீச்சர் கிட்டயும் சாப்பாடு வாங்க வேணானு சொல்லிட்டீங்க. அப்போ சமைச்சி தானே ஆகணும் என ராதிகா சொல்கிறார். உடனே ராதிகாவின் கையைப் பிடித்து எவ்வளவு சாப்டா இருக்க கை கிச்சன்ல வேலை பண்ணலாமா, நாம ஒரு நல்ல குக்கா பார்த்து வேலைக்கு வைச்சிக்கலாம் என கூறுகிறார். அதுக்கு டீச்சர் கிட்டயே சாப்பாடு வாங்கி இருக்கலாமே என ராதிகா சொல்ல அதெல்லாம் வேண்டாம் என சொல்லி விடுகிறார்.
பிறகு ராதிகா உங்களோடு சேர்ந்து வாழ போற நாளுக்காக காத்து கொண்டு இருக்கேன். நீங்க இங்க வந்துட்டீங்களா இல்ல நாம உங்க வீட்டுக்கு போகலாமா என கேட்க கோபி அதிர்ச்சி அடைகிறார். மீண்டும் ராதிகா கேட்க உன்னோட இஷ்டம் தான் என சொல்ல இங்கேயே வந்துடுங்க அங்க உங்க பேமிலி இருப்பாங்க என ராதிகா சொல்கிறார்.
பிறகு நம்ம கல்யாணத்த எப்படி பண்ணபோகிறோம் என கேட்க கோபி திரும்பவும் அதிர்ச்சியாகிறார். என்ன கேட்ட என திரும்ப கேட்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு ஒரு சின்னதா கெட் டு கெதர் வச்சுக்கலாம். உங்களோட பிரண்ட்ஸ், என்னோட பிரண்ட்ஸ், குளோஸ் ரிலேடிவ்ஸ் விஷயங்களை மட்டும் கூப்பிடலாம் என சொல்கிறார். பிறகு நான் கண்டிப்பா டீச்சரை கூப்பிடுவேன் என ராதிகா சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். டீச்சர் கிட்ட நம்ம விஷயம் பற்றி சொல்லும் போது அவங்க அதை நல்ல படியா எடுத்துக்கிட்டாங்க. அவங்க கிட்ட தான் என்னால இந்த விஷயத்த ஷேர் பண்ண முடிந்தது என ராதிகா கூறுகிறார். கூப்பிடு கூப்பிடு ரொம்ப நல்லா இருக்கும் சிறப்பாக இருக்கும் என கோபி சொல்கிறார்.
பிறகு ராதிகா காபி எடுத்துட்டு வரேன் என சென்றதும் கோபி எனக்கு ஏழரை நடக்குது நீ செத்தடா கோபி என புலம்புகிறார். அப்படியே இந்த பக்கம் பார்க்க வீட்டுக்கு கோர்ட்டில் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வருகிறது. கோபி மற்றும் பாக்யாவின் பெயருக்கு வந்திருப்பதாக போஸ்ட்மேன் சொல்ல பதறிப்போன செல்வி பாக்கியாவை கூப்பிடுகிறார்.
பாக்கியா வராததால் ஜெனி இந்த நோட்டீசை வாங்குகிறார். பிறகு ஈஸ்வரி வந்து என்ன ஏது என கேட்க கோர்ட்டிலிருந்து நோட்டீஸ் வந்து இருக்கே என சொல்ல அதிர்ச்சி அடைந்து பிரிச்சு பாரு என சொல்ல ஜெனி தயங்குகிறார். கோர்ட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்தார் பிரச்சனைதான் என்னன்னு பாரு ஜெனி என செல்வியும் சொல்கிறார். ஈஸ்வரி கொடு நான் பிடிச்சு தரேன் நீ படி என சொல்லி அந்த லெட்டரை வாங்குகிறார். அதற்குள் பாக்கியாவும் வந்துவிட பாக்யாவுக்கு கோர்ட்டிலிருந்து உங்க ரெண்டு பேர் பெயரில் போஸ்ட் வந்திருக்கு என சொல்ல அவரும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.