தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராதிகாவை திட்டி போனை வைத்த நிலையில் அவருடைய அம்மா நீ இப்படி இருந்தா அடுத்து விவாகரத்து தான் என பயமுறுத்துகிறார்.
மறுபக்கம் மாலினி வீட்டிற்கு வந்த செழியன் இனிமே உன்னுடைய உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் நீங்க என்ன வேணாலும் பண்ணு எது ஆனாலும் நான் பார்த்துக்கிறேன். நான் செஞ்ச தப்புக்கு ஜெனி என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏத்துக்க தயாராக இருக்கிறேன் என்று அதிர்ச்சி கொடுத்து அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.
அதன் பிறகு இங்கே ஈஸ்வரி கோபியை விழுந்து விழுந்து கவனிக்க வீட்டில் உள்ள எல்லோரும் பேசிக் கொண்டிருக்க பேக்குடன் என்ட்ரி கொடுத்து அதிர்ச்சி கொடுக்கிறார். ஈஸ்வரி நீ எதுக்கு இங்க வந்த எனக்கு கோபப்பட நீங்க என் புருஷன் கூட்டிட்டு வந்துட்டீங்க அவர் இருக்கிற இடத்தில தானே நான் இருக்க முடியும் என்று சொன்ன அதெல்லாம் நீங்க இருக்க முடியாது அது என்ன கோபியோட துணியை வச்சுட்டு கிளம்பு என்று சொல்ல ராதிகா நான் இங்கதான் இருப்பேன் கோபி என் கூட அனுப்புங்க நான் போயிட்டு இருக்கேன் என்று சொன்ன ஈஸ்வரி அது முடியாது என மறுப்பு தெரிவிக்கிறார்.
அப்படின்னா என்னாலயும் போக முடியாது என ராதிகா அதிர்ச்சி கொடுக்கிறார். உங்களுக்கு 2 ஆப்சன் தான் ஒன்னு கோபி அனுப்பனும் இல்லனா நான் இங்க இருப்பேன் என்று ராதிகா சொல்ல ஈஸ்வரி கோபி உடம்பு சரியாகும் வரை இங்கதான் இருப்பான் என்று சொல்ல ராதிகா அப்படின்னா நானும் இங்கதான் இருப்பேன் என்று சொன்ன கோபி பேபி ரூம் கீழே என்று சொல்ல ராமமூர்த்தி, ஈஸ்வரி ரூமுக்கு நுழைகிறார்.
பிறகு பாக்கியா நான் வீட்டை விட்டு போறேன் என்று சொல்ல ஈஸ்வரி நான் ஏற்கனவே வந்த காயப்பட்டு விட்டேன். நீ என்ன கஷ்டப் படுத்தாத, எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பையன் அவனை இழந்ததுடுவேனோனு எனக்கு பயமா இருக்கு. இப்ப ராதிகாவை போக சொன்ன கோபியும் கூடவே போய்டுவா, அவன் வீட்டை விட்டு போயிட்டா நான் உடைந்து போய்விடுவேன் என்று சொல்லி போக ராமமூர்த்தி கொஞ்சம் பொறுமையா இருங்க, எல்லோரும் பதற்றத்தில் இருக்காங்க இப்போ சண்டை போட முடியாது என பாக்யாவை பொறுத்துக் கொள்ளச் சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.