தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி கார் ஓட்டிக்கொண்டு நடந்த விஷயங்களையும் இனியா சொன்னதையும் யோசித்து கண்கலங்குகிறார். கொஞ்ச நேரத்தில் கோபிக்கு நெஞ்சு வலி வர ராதிகாவிற்கு ஃபோன் போடுகிறார் ஆனால் ராதிகா போன் எடுக்காததால் செந்திலுக்கு போட அவரும் எடுக்காமல் இருக்க செழியனுக்கு பண்ணுகிறார். அவரும் எடுக்காததால் மீண்டும் ராதிகாவிற்கு பண்ணிக் கொண்டே இருக்க ராதிகா போனை ஆப் பண்ணி விடுகிறார். உடனே ராதிகாவின் அம்மாவிற்கு போட அவரும் போன எடுக்காமல் ராதிகாவிடம் வந்து சொல்லுகிறார். நீ எடுக்க வேணாம் போய் படு என்று சொல்லி அனுப்பி வைத்து விடுகிறார்.
உடனே கோபி பாக்யாவுக்கு போன் போட பாக்யா இவரதுக்கு நம்மளுக்கு இப்ப பண்றாரு என்று யோசித்து எடுக்காமல் இருக்க உடனே பாக்யாவிற்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் போடுகிறார். உடனே பாக்யாவிற்கு ஃபோன் பண்ண பாக்கியா எடுக்க எங்க இருக்கீங்க என்னாச்சு என்று கேட்க கார்ல இருக்க நெஞ்சுவலி வந்துருச்சு என்று சொல்லி பேசிக்கொண்டே மயங்கி விடுகிறார். உடனே செழியனை போய் பாக்கியா எழுப்ப செழியன் எழுந்திருக்கவில்லை.
உடனே பாக்யா ராதிகாவின் வீட்டிற்கு போய் காலிங் பெல் அடித்து போன் பண்ணி பார்த்தோம் யாரும் வெளியில் வராததால் பாக்கியா காரை எடுத்துக் எடுத்துக்கொண்டு கோபியை பார்க்கிறார். அங்கே கோபி மயங்கி கிடக்க என்னாச்சு எழுந்திருங்க எழுந்திரிங்க என்று கோபி எழுப்ப உடனே வந்துட்டியா பாக்யா என்று மயக்க நிலையில் கேட்கிறார். உடனே பாக்யா ஆம்புலன்ஸ்க்கு போன் போட்டு வர வைக்கிறார்.
உடனே எழிலுக்கு போன் போட்ட பாக்கியா நடந்த விஷயங்களை சொல்லி எழிலை வர சொல்லுகிறார் சரி நானும் வரமா என்று சொல்ல அந்த நேரம் பார்த்து ஆம்புலன்ஸ் வந்து விடுகிறது கோபியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று சேர்த்து விடுகிறார் பாக்கியா. உடனே எழில் வர என்னம்மா ஆச்சு நல்லா தானே இருந்தார் என்று கேட்க எனக்கே தெரியல இரு டாக்டர் பார்த்துகிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார்.கொஞ்ச நேரம் கழித்து டாக்டர் வெளியே வந்து அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று சொல்லுகிறார். இன்னும் டெஸ்ட் எடுக்க வேண்டியது இருக்கு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். வீட்ல இருக்கிறவன் கிட்ட சொல்லலாமா என்று கேட்க நைட் எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க காலையில சொல்லிக்கலாம் என்று சொல்லுகிறார் பாக்யா.
காலையில் குடும்பத்தினர் அனைவரும் வந்து என்னாச்சு எப்படி இருக்காங்க என்று பதறுகின்றனர்.நான் போய் என் பையன பாக்கட்டுமா என்று கேட்க உள்ளாளா போகக்கூடாது அத்தை எமர்ஜென்சி ட்ரீட்மென்ட் புடிச்சிருக்காங்க அதுக்கப்புறம் என்னன்னு வந்து இப்ப சொல்லுவாங்க என்று சொல்ல டாக்டர் வருகிறார்.
குடும்பத்தாரிடம் டாக்டர் என்ன சொல்லுகிறார்? அதற்கு ஈஸ்வரியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.