தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபி பழனிச்சாமியை சந்தித்து பாக்கியாவுடன் பேசக்கூடாது என சொல்லிக் கொண்டிருக்க அவர் அது எனக்கும் பாக்கியா மேடமுக்குமான தனிப்பட்ட விஷயம். அவங்களுக்கு பிடிக்கலைன்னா அதை அவங்க சொல்லட்டும் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார்.
பிறகு பழனிச்சாமி கோபியிடம் நீங்க ரொம்ப நல்லா இங்கிலீஷ் பேசுவீங்க தானே நான் சொல்றதுக்கு இங்கிலீஷ்ல என்னன்னு சொல்லுங்க என்று சொல்லிவிட்டு உங்க வேலையை நீங்க பாருங்க என்று என்ன சொல்ல வேண்டும் என கேட்க கோபி அதனை ஆங்கிலத்தில் சொல்ல பழனிச்சாமி அதை கோபிக்கு திருப்பி சொல்லி ஷாக் கொடுக்கிறார்.
அதன் பிறகு கோபி கடுப்பாகி அங்கிருந்து கிளம்பி வெளியே வர ஏழில் பழனிச்சாமி வீட்டுக்கு வர இருவரும் மோதி கொள்கின்றனர். கோபி நீ இங்க என்ன பண்ற என கேட்க அதை நான் கேட்கணும் என எழில் திருப்பி கேட்கிறார். பிறகு நீங்க எதுக்கு பழனிச்சாமி சாரை பார்க்க வந்தீங்க? என்று கேட்க கோபி அது பர்சனல், அதையெல்லாம் உன்கிட்ட எதுக்கு சொல்லணும் என்று சொன்னதும் சரி நான் பழனிச்சாமி சார் கிட்டயே கேட்டுக்கிறேன் என்று உள்ளே செல்ல கோபி இதெல்லாம் சுத்தமா நல்லாவே இல்ல அவன் எங்க அம்மாவையே பொண்ணு பார்க்க வந்திருக்கான், அதுதான் அவன பிடிச்சு கேள்வி கேட்க வந்தேன் என்று சொல்ல எழில் இப்படி எல்லாம் பண்ண உங்களுக்கு அசிங்கமா இல்லையா?
நீங்க ஒரு கல்யாணத்தை பண்ண எங்க அம்மாவ டிவோஸ் பண்ணுவீங்க டிவோர்ஸ் ஆன எங்க அம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாதா? என்று கேட்க நான் பண்றது வேற அவங்க பண்றது வேற அதெல்லாம் தப்பு என்று கோபி சொல்ல எழில் எங்க அம்மாவுக்கு விருப்பம் இருந்தா நானே கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார்.
அதன் பிறகு பழனிச்சாமியை சந்தித்து பேசும் எழில் கோபி பேசியதற்காக மன்னிப்பு கேட்க அவர் அவர் போனதும் அது எல்லாத்தையும் நான் மறந்துட்டேன் என்று சொல்கிறார். பிறகு தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து விட்டு வீட்டுக்கு வரும் எழில் பாக்கியாவிடம் கோபி பழனிச்சாமி வீட்டுக்கு சென்று உன்ன பெண் பார்க்க வந்ததாக நினைத்து சண்டை போட்ட விஷயத்தை சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.
இந்த நேரத்தில் எழில் உனக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என சொல்ல பாக்கியம் பளார் என்று அறைகிறார். எப்படி நீ அப்படி கேட்கலாம் என பாக்யா கோபப்பட எழில் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்கிறார்.
பிறகு செழியன் மற்றும் ஈஸ்வரி என இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்க அங்கு வரும் கோபி டல்லாக இருக்க ஈஸ்வரி தலை வலிக்குதா காபி போட்டு கொடுக்கவா என்று கேட்கிறார். கோபி அந்த பனைமரம் எதுக்கு இங்க பொண்ணு பார்க்க வந்தான் என்று பேச ஈஸ்வரி ரொம்ப நல்ல பையன் என்று பேச கோபி இன்னும் கடுப்பாகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
