தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் தன்னுடைய தாத்தா கிட்ட வந்து அவரை நடக்க வைத்து பயிற்சி கொடுக்கிறார். எழிலின் முகம் சோகமாக இருப்பதை பார்த்து அவர் என்னாச்சு என கேட்க முதலில் பதில் எதுவும் சொல்லாமல் ஒன்றும் இல்லை என கூறி விடுகிறார்.
ஆனால் தாத்தா திரும்பத்திரும்ப என்னாச்சு சொல்லு சொல்லு என கேட்க அது வைத்துவிட்டு தாத்தாவிடம் நடந்ததைக் கூறி கதறி அழுகிறார். அப்பா கொஞ்சம் கூட மாறவே இல்ல நாம போன இடத்துக்கு வேற ஒரு லேடி கூட்டிட்டு வந்துட்டாரு. நம்பல பார்த்துட்டு அவங்களை கூட்டிக்கிட்டு வேகவேகமா அங்கிருந்து கிளம்பினார். இதை அப்பா கிட்ட போய் கேட்கும்போது ஒண்ணுமே பேசாம அப்படியே கல்லு மாதிரி இருக்கிறார். அவரு கொஞ்சம் கூட மாறவே இல்ல யாரைப் பத்தியும் யோசிக்கலை. அவருக்கு அவருடைய சந்தோஷம் மட்டும் தான் முக்கியம் என சொல்லி அழுகிறார்.
எனக்கு அப்பாவை பார்த்தா கோவம் கோவமா வருது ஏதாவது பண்ணிடலாம் போல இருக்கு. அப்பாவே வேண்டாம்னு தோணுது, இந்த விஷயமெல்லாம் குடும்பத்துக்கு தெரிந்தா குடும்பம் தாங்காது. ஆனா இதெல்லாம் அதற்கு கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை ஏன் தாத்தா அவரு இப்படி இருக்காரு என தாத்தாவை கட்டிக்கொண்டு அழுகிறார்.
இந்த பக்கம் கோபி ராதிகாவையும் பாக்கியாவையும் நிரந்தரமாக பிடிக்க முடிவு செய்து வீட்டை காலி பண்ணச் சொல்லியிருக்கிறார். ராதிகாவும் நகைகளை எடுத்து வைக்க மேலே செல்கிறார். எங்க ரெண்டு பேரையும் பிடிக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு என கோபி புலம்புகிறார்.
இந்த பக்கம் கோபியின் அப்பா மட்டும் தனியாக ரூமில் இருக்க அப்போது பாக்கிய வந்து அவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு அத்தை கோவிலில் இருக்காங்க ஒரே கூட்டமா இருக்கு நான் போய் அவர்களை கூட்டிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு சென்று பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார். மேலே இருந்து கீழே வருவதற்குள் தாத்தா ராதிகாவுக்கு கோபி பாக்கியாவின் புருஷன் என்பதை தெரியப்படுத்த வேண்டும் அப்போது தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை எடுத்துக் கொண்டு ராதிகா வீட்டிற்கு முடியாமலும் நடந்து செல்கிறார்.
பிறகு ஜெனி கீழே வந்து பார்க்க தாத்தா ரூமில் இல்லாததால் இனியாவையும் அழைத்து தேட தாத்தா அங்கு இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நேரத்தில் செழியனும் வந்துவிட அவரிடம் தாத்தா இல்லை என்ற விஷயத்தை சொல்ல அவர் நான் பார்த்து வருகிறேன் என தாத்தாவை தேடிச் செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இவர் நடந்து ராதிகா வீட்டிற்குச் செல்வதற்குள் ராதிகா வீட்டை காலி சென்று சென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோட்டில் பார்க்கலாம்.
