தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராதிகா மகளிடம் இனி கோபி பற்றி பேசக்கூடாது என சொல்ல கோபி அங்கிள் நல்லவர் தானே அவர்கிட்ட எதுக்கு பேச கூடாதுன்னு சொல்றீங்க என் கூட கூட பேச ராதிகா சொல்றதை புரிஞ்சிக்க என கூறுகிறார். பிறகு அவர் என்னை பார்க்க ஸ்கூலுக்கு வந்து இருந்தார் என சொல்ல இதைக்கேட்ட ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு கோபி எங்கள் நல்லவர் தான் நீங்க தான் அவரை வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லி திட்டறீங்க. அவர் எவ்வளவு அன்பா இருக்கார் என சொல்ல ராதிகா ஒரு கட்டத்தில் மகளை அறைந்து விடுகிறார். பிறகு ராதிகாவின் அம்மா ராதிகாவை திட்டுகிறார்.
இந்த பக்கம் கோபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இனியா வந்து தன்னுடைய மார்க்சீட்டை காட்டி கையெழுத்து வாங்கிவிட்டு பிறகு முன்பைப் போல இப்போது என்கிட்ட பேசுறதே இல்லை என சொல்லி வருத்தப்படுகிறார். கோபி இனிமே முன்ன மாதிரி பேசுவேன் என கூறுகிறார்.
பிறகு எழில் அமிர்தாவிடம் போனில் பேசிக்கொண்டிருக்க இதை செழியன் ஈஸ்வரியிடம் போட்டுக் கொடுக்கிறார். எழில் இல்ல பாட்டி ப்ரெண்ட் என சொல்லி சமாளிக்க அந்த ப்ரெண்ட் யாருன்னு கேளுங்க, அமிர்தா தான் எழிலை மாட்டி விட ஈஸ்வரி கோபப்பட்டு திட்டுகிறார். பிறகு ஜெனி உனக்கு எதுக்கு இந்த வேலை என சொல்லி செழியனை திட்டி உள்ளே அழைத்துச் செல்கிறார்.
அதன்பிறகு கோபி தூங்காமல் இரவெல்லாம் கண் விழித்துக் கொண்டிருக்க பாக்கியா லைட்டைப் போட்டு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கீங்க என கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் கோபி ராதிகாவின் காலில் விழ இந்த ட்ராமா எல்லாம் தேவையில்லை என அவரை வெளியே தள்ளுகிறார். அக்கம்பக்கத்தார் ராதிகாவை கேள்வி கேட்க தொடங்குகின்றனர்.