தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி எல்லோரிடமும் சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார். ஈஸ்வரி தூங்கப் போகலாம் என்று சொல்ல, ஜாலியா பேசி சிரிச்சுக்கிட்டு இருக்கலாம் என்று ராமமூர்த்தி கேட்க எல்லோரும் சந்தோஷமாக விதவிதமாக செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
பிறகு கிச்சனில் பாக்கியா செல்விக்கு பழங்கள் மற்றும் ஸ்வீட் கொடுத்து விட பாத்திரம் எல்லாம் பத்திரமா எடுத்துக்கிட்டு வா என்று ஒரு வார்த்தை தான் சொல்கிறார். ஆனால் செல்வி நான் இதுக்கு முன்னாடி எடுத்து வரலையா நான் அந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டேன் என்று பேச ராமமூர்த்தி இந்த பொம்பளைங்களுக்கு பாத்திரங்கள் மட்டும் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க என்று சொல்கிறார்.
பிறகு செல்வியிடம் நீ இதே மாதிரி பாக்யாவுக்கு எப்பவும் ஒரு நல்ல சப்போர்ட்டா இருக்கணும், ஒரு தோழியா சகோதரியா ஒத்துமையா இருக்கணும் என்று பேச என்னய்யா இன்னிக்கு எல்லாம் அறிவுரை சொல்லிக்கிட்டே இருக்கீங்க என்று கிண்டல் செய்கிறார் செல்வி. பாக்கியாவிடம் சீரகத் தண்ணீர் கேட்கிறார். பாக்கியாவிடம் எழில்க்காக நீ எடுத்த முடிவு சரிதான் பாக்கியா, எழில் இங்க இருந்தா ஈஸ்வரி ஏதாவது சொல்லிக்கொண்டு தான் இருப்பா அது எல்லாருக்கும் கஷ்டம்,செழியன் விஷயத்தில் நான் முதலில் பயந்தேன் ஆனால் அவனே இப்ப பொறுப்பானவனாய் இருக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ இப்ப இல்லமா எப்பவுமே சரியான முடிவதா எடுத்து இருக்கு ஆனா நான் தான் உன் வாழ்க்கையில தப்பான முடிவு எடுத்துட்டேன் என்று சொல்லி கண்கலங்குகிறார். நீ சந்தோஷமா இருமா ஒரு அப்பா ஸ்தானத்துல நான் இங்கேதான் இருப்பேன்,நான் இல்லனாலும் இங்கேதான் சுத்திகிட்டு இருப்பேன் என்று பேச என்ன மாமா பேசுறீங்க என்று கேட்க, நீ ரொம்ப நல்ல பொண்ணுமா நீ நல்லா இருக்கணும் என்று சொல்கிறார். உங்கள பார்த்தா ரொம்ப டயர்டா இருக்கு நீங்க போய் படுங்க என்று பாக்கி அனுப்பி வைக்க, எழுந்து சென்ற ராமமூர்த்தி திடீரென திரும்பி நின்று கண்கலங்கிய படி பாக்யாவிற்கு ஆசீர்வாதம் செய்கிறார்.
மறுபக்கம் எழில் நாளைக்கு வீடு ஒன்னு பாக்க போறோம் என்று அமிர்தாவிடம் சொல்லிக் கொண்டிருக்க செழியன் அங்கு எடுத்த போட்டோக்களை எழிலுக்கு அனுப்ப அதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். நிலா பாப்பா எனக்கு இப்ப ரொம்ப பசிக்குது அப்பா என்று கேட்க நான் இப்பவே போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன் என்று சொல்ல அமிர்தா அந்த ஸ்வீட் பேக்கை எடுங்க என்று சொல்லுகிறார். அதில் பாக்யா பணத்தை வைத்திருக்க எழில் அவங்க கிட்ட கொடுத்திடலாம் என்று சொல்ல அமிர்தா அவங்ககிட்ட கொடுக்க எனக்கு கஷ்டப்படுத்த விருப்பமில்லை இது என்கிட்ட இருக்கட்டும் என்று சொல்லிவிட எழில் அமைதியாக விடுகிறார்.
பிறகு ராமமூர்த்தி தூக்கம் இல்லாமல் தவிக்கிறார், அவருக்கு என்ன ஆகப்போகிறது? என்ற பதற்றத்துடன் நகர்கிறது கதைக்களம். பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியலும் நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம்.