தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஈஸ்வரி மற்றும் இனியாவை வீட்டுக்கு வாங்க போகலாம் என்று கூப்பிட முதலில் இருவரும் மறுக்கின்றனர் பிறகு செழியன் நானும் எழிலும் இங்கதான் இருப்போம் இங்கே போங்கப் பாட்டி நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க என்று சொல்ல மூவரும் வீட்டுக்கு கிளம்புகின்றனர். வீட்டுக்கு வந்த இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க இனியா டாடிக்கு ஒன்னும் ஆகாது இல்லம்மா என்று சொல்லுகிறார். ஈஸ்வரி ஒன்னும் ஆகாது டாக்டர் தான் எதுவும் ஆகாதுன்னு சொல்லி இருக்காங்களா என்று சொல்லிவிட்டு நான் கும்பிடுற சாமி தான் கோபி கிட்ட உன்னை கூட்டிட்டு போய்விட்டு இருக்கு என்று சொல்லி பேசிவிட்டு இருவரும் எழுந்து கிளம்பி விடுகின்றனர்.
செல்வி டீ போட்டுக் கொடுக்க என்ன கா கோபி சாருக்கு ஆபரேஷன் பண்ணி இருக்காங்கன்னு நீ டீ குடிக்கிறியா சாப்பிட பிடிக்கலையா என்று கேட்கிறார் அதெல்லாம் ஒன்னும் இல்ல கம்முனு இரு என்று சொல்லுகிறார். கோபி சாருக்கு இதயத்தில் தானே ஆபரேஷன் பண்ணி இருக்காங்க என்று கேட்க ஆமாம் என்று பாக்யா சொல்லுகிறார். உன்ன பண்ண டார்ச்சருக்கு இதயமே இருக்காதுன்னு நினைச்சேன் ஆனா இருந்துச்சா அக்கா என்று கேட்க பாக்யா இருந்துச்சு என்று சொல்லுகிறார். அதுல நீ இருந்தியா இல்ல ராதிகா இருந்துச்சானு கேட்க பாக்கியா முறைத்துப் பார்க்கிறார். அவர் என்ன தான் உனக்கு கொடுமை பண்ணாலும் போன் பண்ண உடனே போய் காப்பாத்திட்ட இல்லக்கா என்று கேட்க ஒருத்தர் உதவின்னு கேட்கும்போது செஞ்ச அவ்வளவுதான் என்று சொல்லுகிறார் பாக்யா. உடனே பாக்யா நான் போய் ராதிகா கிட்ட விஷயத்தை சொல்லிட்டு வரேன் என்று சொல்ல இன்னுமா அவங்களுக்கு தெரியாது இல்லனா சொல்லாத விட்டு இருக்கா என்று சொல்ல அதெல்லாம் தப்பு என்னோட கடமை சொல்ல வேண்டியது நான் சொல்லிட்டு வரேன் என்று வெளியே வருகிறார் அதற்குள் ராதிகாவின் அம்மா ராதிகாவிற்கு ஃபோன் போட்டு மாப்பிள்ளை பத்தி ஏதாவது தெரிந்ததா என்று கேட்க எதுவும் தெரியவில்லை அம்மா நீ மயுகிட்ட எதுவும் சொல்லாத நீ ஸ்கூலுக்கு போகலையா இன்னும் மயு கூப்பிட என்று சொல்ல அதுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லி ஒரு ஆட்டோ வந்தவுடன் அதில் ஏறி கிளம்புகிறார். அவர் கிளம்பி ஏதும் பாக்யா கேட்டை திறக்க வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருப்பதால் ராதிகாவிற்கும் போன் போகவில்லை.
உடனே ஈஸ்வரி மற்றும் பாக்யா இருவரும் ஹாஸ்பிடலுக்கு வர நைட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வரலாம் அல்ல பார்ட்டி என்று சொல்ல என் பையன் ஆப்ரேஷன் பண்ணி படுத்துகிட்டு இருக்கான் எனக்கு எப்படி தூக்கம் வரும் என்று சொல்லி கோபியை கண்ணாடியில் நின்று பார்க்கிறார்.
எழில் அவங்களுக்கு விஷயம் தெரியும் மாமா என்று கேட்க தெரியாது ஆனா சொல்லணும் என்று சொல்லுகிறார் உடனே போன் போட ராதிகாவிற்கு கால் போகிறது. நான் சொல்றத பதத்தப்படாமல் கேட்டுட்டு உடனே ஹாஸ்பிடலுக்கு வாங்க என்று கூப்பிடுகிறார். ஹாஸ்பிடலுக்கு வந்த ராதிகா விஷயம் கேள்விப்பட்டு கோபியை பார்க்க ஓடிவர ஈஸ்வரி தடுத்து நிறுத்துகிறார்.
ராதிகா என்ன சொல்கிறார்? அதற்கு ஈஸ்வரி கேட்ட கேள்வி என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.