தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபியின் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவரால் பேச முடியாது ஒரு கை கால் செயல்படவில்லை என கூறுகின்றனர்.
இதனைக் கேட்டு பாக்கியா கதறி அழுகிறார். எழில் தாத்தாவுக்கு நேற்றும் பிபி அதிகமாக இருந்துச்சு. அவர்தான் ஹாஸ்பிடலுக்கு வரலைனு சொல்லிட்டாரு. நான் அப்படியே விட்டு இருக்கக்கூடாது தாத்தாவை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிவந்து இருக்கணும் என கண்கலங்கி அழுகிறார். தன்னுடைய மாமனார் தனக்காக செய்த உதவிகள் குறித்து யோசித்து பார்க்கிறார் பாக்கியா. அனைவரும் வெளியில் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ஈஸ்வரியும் ஜெனி மற்றும் இனியாவுடன் மருத்துவமனைக்கு வருகிறார்.
பிறகு அனைவரும் உள்ளே சென்று பார்க்கும்போது ஈஸ்வரி என்னங்க இப்படி படுத்துட்டு இருக்கீங்க என கதறி அழுகிறார். அவரு பேசுவாரு தானா என ஈஸ்வரி கேட்க அங்கிருந்த நர்ஸ் அவருக்கு பக்கவாதம் பேச்சு வராது ஒரு பக்கம் கை கால் செயல் படவில்லை என கூற ஈஸ்வரி ரொம்ப கண் கலங்கி அழுதார். இனியாவும் தாத்தா தாத்தா என அழுகிறார். பாக்கியா தன்னுடைய அத்தையை மாமாவுக்கு சீக்கிரம் சரியாகிவிடும் அழுவாதீங்க என சமாதானம் சொல்கிறார். கோபி உள்ளே இருந்து வெளியே சென்று என்னால தான் அப்பாவுக்கு இந்த நிலைமை என வருத்தப்படுகிறார்.
பிறகு அனைவரும் வீட்டிற்கு கிளம்பி விட பாக்கியா மட்டும் அவருடைய மாமனாருடன் இருக்கிறார். அப்போது கோபி கையில் மருந்து மாத்திரையுடன் உள்ளே வர கோபியை பார்த்த அவருடைய அப்பா கோபப்படுகிறார். பாக்யாவுக்கு என்ன சொல்கிறார் என்ன ஆச்சு என தெரியாமல் பயப்பட கோபி எனக்கு வேலை இருக்கு நான் கிளம்பறேன் என அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
பிறகு இரவில் பாக்கியா ஈஸ்வரியுடன் படுத்து தூங்க அவர் எழுந்து உங்க மாமாவுக்கு சரியாகிடும்ல என கேட்கிறார். அதெல்லாம் சரி ஆகிடும் அத்தை என பாக்கியா சொல்ல அவர் ஒருநாளும் இப்படி பேசாம இருந்ததே இல்லை. அவரு பேசிக்கொண்டே இருப்பார் என தன்னுடைய கணவர் பற்றி தனக்கு கல்யாணம் ஆன புதிதில் இருந்தே அவர் பார்த்து கொண்டதை பற்றி கூறுகிறார் ஈஸ்வரி. சீக்கிரம் நாம குணமாக்கி பழையபடி உங்களிடம் பேசத்தான் போராரு என கூறி அத்தையை சமாதானம் செய்கிறார் பாக்கியா.
மறுநாள் காலையில் எழில் மற்றும் செழியன் தாத்தாவுடன் மருத்துவமனையில் இருக்கின்றனர். ஏனெனில் அவருடைய தாத்தா அவருக்கு பிடித்தார் போல பேசி அவரைப் போலவே நடந்து அவரை மகிழ்ச்சி படுத்துகிறார். நாளைக்கு வீட்டுக்கு போய்டலாம் அங்கிருந்து தான் உங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கப் போறோம். வீட்டிலேயே ஜாலியா இருக்கலாம் என சொல்கிறார். எனக்கு நாலு நாள்தான் சூட்டிங் அதுக்கப்புறம் மொத்தமா முடிஞ்சிடும். என்னோட படத்தை நீங்க தியேட்டர்ல வந்துதான் பாப்பீங்க. அதுவும் எப்படி நடந்து வருவீங்கன்னு சொல்லட்டுமா என அதே போல் நடந்து காட்டுகிறார். பிறகு இளையராஜா பாட்டை போட்டு அவருடைய தாத்தாவை தூங்க வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
