Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாலினி கொடுத்த ஷாக். சிக்கிய கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi-serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மாலினி போன் செய்ய செழியன் எனக்கு குழந்தை பிறந்திருக்கு நான் பிஸியா இருக்கேன் என்று சொல்ல நான் உங்கள உடனே பாக்கணும் வாங்க என்று கூறுகிறார்.

என்ன பேசிட்டு இருக்க நீ? என்னால இப்ப வர முடியாது என செழியன் போனை வைக்க மாலினி நீங்க இப்ப வரலைன்னா நான் என் கையை அறுத்துப்பேன் என பிளாக்மெயில் செய்து வாய்ஸ் மெசேஜ் அனுப்ப அதைக் கேட்டு செழியன் அதிர்ச்சி அடைகிறார். பிறகு வேறு வழி இல்லாமல் பாக்கியாவிடம் ஆபீஸ் வேலை ஒரு மணி நேரத்தில் வந்து விடுவேன் என பொய் சொல்லி மாலினி வீட்டிற்கு வருகிறார்.

மாலினி செழியனை கட்டிப்பிடித்து உங்களுக்கு குழந்தை பிறந்துடுச்சு, இனிமே எல்லாம் அவ்வளவுதானா? என்கிட்ட பேச மாட்டீங்களா? என்னை மறந்திடுவீங்களா அப்படி மட்டும் பண்ணிடாதீங்க நான் ஒண்ணுமே இல்லாம போயிடுவேன் என அழுது புலம்புகிறார். செழியன் நான் உடனே கிளம்பனும் என்று சொல்ல மாலினி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என் கூட இருந்த என்று பேசி செழியனை வேறு வழியில்லாமல் தங்க வைக்கிறார்.

மறுநாள் காலையில் செழியன் ஹாஸ்பிடல் கிளம்ப மாலினி ஹாஸ்பிடல் போய் உங்க குழந்தையை பார்த்துட்டு திரும்பவும் இங்கேயே வந்துடுங்க நான் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என சொல்லி அனுப்புகிறார்.

அடுத்து என் வீட்டில் உட்கார்ந்து போன் பேசிக் கொண்டிருக்கும் போது சிலர் பேங்கில் இருந்து வருகின்றனர். எழில் அம்மாவ பாக்கணுமா அவங்க வீட்ல இல்ல என்ன விஷயம்னு சொல்லுங்க வந்ததும் அவங்க கிட்ட சொல்லிடுறேன் என்று சொல்ல கோபி சார் இருக்காரா அவரை பார்க்க வந்தோம் என கேட்க எழில் அப்படி யாரும் இல்லை என கூறுகிறார்.

அதன் பிறகு என்ன விஷயமா வந்தீங்க என்று கேட்க நாலு அஞ்சு மாசமா கிரெடிட் கார்டு பில் கட்டல என்று சொல்ல கோபியின் அட்ரஸை கொடுத்து கோர்த்து விடுகிறார். பிறகு கோபியை தேடி ராதிகா வீட்டுக்கு வரும் பேங்கர்ஸ் கிரெடிட் கார்டு விஷயமா வந்திருப்பதாக சொல்ல கோபி நைஸாக வெளியே கூட்டி வந்து ராதிகாவுக்கு தெரியாமல் அவர்களிடம் கூடிய சீக்கிரம் பணத்தை கட்டி விடுகிறேனு சொல்லி அனுப்பி வைக்கிறார். மேலும் இனிமே எதுவாக இருந்தாலும் ஆபீஸ் அட்ரஸ்க்கு வாங்க என சொல்கிறார்.

அடுத்ததாக கோபி வீட்டுக்கு வர ராதிகா என்ன விஷயம் என்று கேட்க கிரெடிட் கார்டு ஆபர் இருக்குனு வந்து இருந்தாங்க என கதை அளந்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi-serial episode-update
baakiyalakshmi-serial episode-update