தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் ஜெனி குறித்து பேசி வருத்தப்பட கோபி கொஞ்ச நாளைக்கு அமைதியாக இரு வேலையை கவனம் செலுத்தி எல்லாம் சரியாகும் என அறிவுரை சொல்ல பாக்யா இதைக் கேட்டு வருத்தப்படுகிறார்.
அதைத் தொடர்ந்து ஜெனிக்கு whatsapp வாய்ஸ் மெசேஜ் உனக்கு ரொம்ப மிஸ் பண்றேன், கொஞ்சம் பொறுமையா இரு எல்லாம் சரியாகிவிடும் உன்னையும் குழந்தையும் நல்லபடியா பார்த்துக்க என சொல்ல ஜெனி அதைக் கேட்டு கண் கலங்குகிறார்.
அடுத்ததாக பாக்கியா மற்றும் எழில் இருவரும் சேர்ந்து பழனிச்சாமியை சந்திக்கின்றனர்.அவர் கவர்மெண்ட் காண்ட்ராக்ட் ஒன்றை பத்தி சொல்ல பாக்யாவும் எழில் கண்டிப்பாக அதற்கு விண்ணப்பிப்பதாக சொல்லி அங்கிருந்து கிளம்பி வந்து வீட்டில் விஷயத்தை சொல்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி இதெல்லாம் தேவையா என்று பேசி கோபி நீதான் பிசினஸ் பண்ற உனக்கு நான் இதை பத்தி எல்லாம் தெரியும் நீ என்ன சொல்ற என கேட்க கோபி அதெல்லாம் நிறைய போட்டு இருக்கும் கண்டிப்பா கிடைக்கிறதுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க எழில் இவர் எப்படி நல்ல வார்த்தை சொல்லுவாரு என்று பதிலடி கொடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அங்கு வரும் ராதிகா நம்ப பிஸினஸ் தண்ணில மூழ்கிக்கிட்டு இருக்கு இதெல்லாம் தேவையா என கோபியை அவமானப்படுத்துகிறார். உன் புருஷனை எல்லாரும் முன்னாடியும் இப்படி அவமானப்படுத்தி பேசுகிற என ஈஸ்வரி கோபப்பட ராதிகா இப்பயாவது அவர் என் புருஷன் என்று ஒத்துக்கிட்டீங்களே என பதிலடி கொடுக்கிறார்.
மறுநாள் பாக்கியா மற்றும் எழில் என இருவரும் ஈஸ்வரி வழக்கம் போல இதுதான் தேவையா என்பது போல பேச ராமமூர்த்தி உனக்கு நம்பிக்கை இருக்கு இல்ல நீ கண்டிப்பா ஜெயிப்ப, போயிட்டு வா என வாழ்த்தி அனுப்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.