Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவை திட்டிய குடும்பத்தினர். கணேஷ் கொடுத்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi-serial-episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கணேஷ் அமிர்தா மற்றும் நிலா பாப்பாவை கடத்தி கொண்டு செல்ல பாக்கியா அவர்களை ஆட்டோவில் பின் தொடர்ந்து செய்கிறார்.

அமிர்தா எங்களை விட்டுடு என்று கெஞ்ச கணேஷ் அப்படியெல்லாம் விட முடியாது இனிமே நீ என் கூட தான் இருக்கணும் என்று கணேஷ் சொல்கிறார். இன்னொரு பக்கம் ஆட்டோவில் பின் தொடர்ந்து வந்த பாக்கியா ஒரு கட்டத்தில் காரை மிஸ் பண்ணி விடுகிறார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் பாக்கியா எழிலுக்கு போன் போட்டு கணேஷ் நம்பலை நம்ப வைத்து ஏமாத்திட்டான் என்று நடந்த விஷயங்களை சொல்ல எழில் அதிர்ச்சி அடைந்து நீ அங்கேயே இரு மா நான் வந்துடுறேன் என்று கிளம்பி வருகிறார். பிறகு இருவரும் மீண்டும் கணேஷ் வீட்டுக்கு சென்று அவர்களது அப்பா அம்மாவிடம் ஏதாச்சு தகவல் தெரிந்ததா எங்கே போய் இருக்காங்க என்று கேட்க அவங்க எதுவுமே தெரியல அவன் இப்படி பண்ணுவான் என்று நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என்று கலங்குகின்றனர்.

பாக்யா ஏதாவது தகவல் தெரிந்தால் உடனே எனக்கு போன் பண்ணுங்க என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வருகிறார். வீட்டில் எல்லோரும் எழில் எங்கே அமிர்தா எங்கே என்று கேட்க பாக்யா நடந்த விஷயங்கள் சொல்லவும் கோபியும் ஈஸ்வரியும் ரவுண்டு கட்டி திட்டிட்டு இருக்கின்றனர்.

இதெல்லாம் நடக்கும்னு லிஸ்ட் போட்டு சொன்னேனே நீ கேட்டியா? யாரு பேச்சையும் கேட்காமல் உன் இஷ்டத்துக்கு முடிவெடுக்கிற இப்போ யாருக்கு பிரச்சனை இப்ப நமக்கு யாரு உதவிக்கு வரப்போறா என்று ஈஸ்வரி ஆவேசப்படுகிறார். இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கல என்று பாக்கியா கலங்கி அழ உன்னால செழியனோட வாழ்க்கை அந்தரத்துல நிக்குது இப்போ எழிலோட வாழ்க்கைக்கும் பிரச்சனை வந்துடுச்சு என்று கோபப்படுகிறார்.

இனிமே நீ எதுக்காகவும் இந்த வீட்டில் வாயைத் திறக்க கூடாது என்று கண்டிஷன் போடுகிறார் ஈஸ்வரி. இந்த குடும்பத்தோட நிம்மதியை அழிக்க வந்திருக்க என்று திட்டுகிறார். பிறகு செழியனிடம் எழிலை போன் போட்டு உடனே இங்க வர சொல்லு அந்த அமிர்தா எங்கனா போகட்டும் அதை பற்றி கவலை இல்லை என்று சொல்கிறார்.

மறுபக்கம் அமிர்தா தயவுசெய்து எங்கள விட்டுடு என்று சொல்ல கணேஷ் அப்படியெல்லாம் விட முடியாது அதுக்காகவா உங்கள கஷ்டப்பட்டு இங்கு கூட்டிட்டு வந்து இருக்கேன்? இனிமே நீயும் நானும் நிலா பாப்பாதான் ஒண்ணா தான் வாழ போறோம் இதுதான் நம்முடைய வாழ்க்கை மத்தது எல்லாத்தையும் மறந்துடு என்று சொல்கிறார். நான் எல்லாத்தையும் கடந்து வந்துட்டு ஒரு புதிய வாழ்க்கைக்குள்ள போயிட்ட என்னை விட்டுடு என்று கெஞ்ச அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்று கணேஷ் எச்சரிக்கிறார்.

கண் காணாத இடத்துக்கு போய் சந்தோஷமா வாழப் போறோம். என்கிட்ட ஒரு பிளான் இருக்கு என்று கணேஷ் அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi-serial-episode-update
baakiyalakshmi-serial-episode-update