தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிசாமி கடையை டெக்ரேட் செய்து அவர்கள் வந்ததும் ரிப்பன் கட் பண்ண வைத்து விளக்கேற்ற வைத்து பிறகு ஸ்பெஷலாக செய்த ஸ்வீட்டையும் கொண்டு வந்து கொடுக்கிறார்.
பிறகு பழனிச்சாமி இது ரெண்டும் ஒரே கடை தான் நீங்க வேற வேற கடையா நினைக்காதீங்க என்று சொல்கிறார். அதன் பிறகு பழனிச்சாமி அக்கா ரெண்டு பேரும் நெருங்கி நெருங்கிட்டீங்க போல என்று கலாய்க்க பாக்யா ஒண்ணுமே தெரியாது போல நாங்க எப்பயுமே க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் தான் என சொல்கிறார்.
அதன் பிறகு கோபி பாக்யாவை போல ரெஸ்டாரன்ட் வீடு என இரண்டையும் கவனித்துக் கொள்ள முயற்சி செய்து படாத பாடு படுகிறார். ஒரு கட்டத்தில் ஈஸ்வரியிடம் முடியல என்று சொல்லி புலம்ப பாக்யாவும் தான் எல்லாத்தையும் கவனிக்கிறா, ஆனா ஒரு நாளும் இப்படி புலம்பனது இல்லை, நீ மட்டும் ஏண்டா இப்படி இருக்க என்று கலாய்க்கிறார்.
பாக்கியா இதெல்லாம் எப்படி சமாளிக்கிறா என்று கோபி கேட்க அதை அவ கிட்டயே கேளு என்று கோர்த்து விடுகிறார். பிறகு ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி பேசுவதற்காக ஓரமாக போய் உட்கார்ந்து விட கோபி பாக்யாவை வழி மறைத்து எல்லாத்தையும் எப்படி சமாளிக்கிற எனக்கும் டிப்ஸ் கொடு என்று கேட்கிறார். நீங்களே பெரிய அறிவாளி, எல்லாரோட அறிவையும் சேர்த்து குத்தகைக்கு எடுத்து வச்சிருக்கீங்க. அப்படி இருக்கும் போது என்கிட்ட ஐடியா கேட்கிறீங்க போங்க சார் என்று துரத்தி விடுகிறார். கோபி இவகிட்ட போய் கேட்டேன் பாரு எனக்கு இது தேவைதான் என்று புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.