தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பெரிய விருந்து சமைத்து எல்லோரையும் கூப்பிட்டு பரிமாற செல்வி நல்லா சாப்பிடுங்க மா என்று ஜெயில் சாப்பாடு சாப்பிட்டு உங்க நாக்கு செத்துப் போயிருக்கும் என்று சொல்ல ராமமூர்த்தி கோபப்பட பாத்தியா கடந்த மூணு நாளா நடந்தது எதையும் பேசக்கூடாது என்று கண்டிஷன் போடுகிறார்.
இனியாவும் ஜெயில் பற்றி அடுக்கடுக்காக கேள்வி கேட்க பாக்யா திட்டிவிட்டு பிறகு ஈஸ்வரி சாப்பிடப் போகும் போது கோபி உள்ளே வந்து அம்மா என்று நிற்க அவரைப் பார்த்து எல்லோரும் கோபப்படுகின்றனர். ஒரே ஒருமுறை என் அம்மா கிட்ட பேசிட்டு போயிடுறேன் ஈஸ்வரி கோபப்படுகிறார்.
உன்னால பட்ட கஷ்டம் எல்லாம் போதும் நான் ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட்டு நிற்கும்போது இந்த அம்மா கண்ணுக்கு தெரியலையா என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க கோபி பதில் இல்லாமல் நிற்கிறார். எனக்காக ஓடோடி வந்து உதவிய பாக்யா ஒருத்தி போதும். அவளும் இந்த குடும்பமும் எனக்கு போதும் இவங்கள தவிர வேற யாரும் வேண்டாம் என்று சொல்கிறார்.
எனக்கு கோபின்னு ஒரு பையன் இருந்தான் ஆனா இப்போ இல்ல அவன் பிறக்கவே இல்லன்னு சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார் ஆனால் எனக்கு ஒரு மகள் இருக்கா என்று பாக்கியாவை கொண்டு வந்து நிறுத்த பாக்கியா ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். நான் செத்தாலும் என் முகத்துல முழிக்க கூடாது என கோபியை மொத்தமாக தலைமுழுகி துரத்தி விடுகிறார் ஈஸ்வரி.
வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்து கண்ணீர் வடிக்கிறார் கோபி. பிறகு இதுக்கெல்லாம் காரணமான கமலாவை சும்மா விடமாட்டேன் என வீட்டிற்கு வந்து கதவை தட்ட கமலா கோபிக்கு பயந்து ஓடி ஒளிந்து கொள்கிறார். ராதிகா கதவு திறக்க கோபி சோபாவில் இருந்து உட்கார்ந்து கண்கலங்க கமலா வேடிக்கை பார்க்க ராதிகா அவரை பிடித்து திட்டுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.