Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இனியாவுக்கு அட்வைஸ் கொடுத்த பாக்யா, கோபத்தில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

BaakiyaLakshmi Serial Episode Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் இனியாவிற்கு அங்க எந்த சப்போர்ட்டும் இல்ல, அவ என்ன பண்ணுவா என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க உடனே ராதிகா என்கிட்டயே பொய் சொல்றீங்க இல்ல என்று சொல்லுகிறார். என்ன சொல்ற என்று கேட்க பாக்யா வேணான்னு சொன்னதுனால தான் நீங்க சம்மதிச்சீங்க இல்லன்னா நீங்க சம்மதித்து இருப்பீங்களான்னு சொல்லுங்க என்று கோபியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க கோபி விடை தெரியாமல் முழிக்கிறார். இது மட்டும் இல்லாமல் இனியாவிற்கு அங்க எல்லாமே கரெக்டா கிடைச்சதுனா அவ போன் பண்ண மாட்டா உங்கள கண்டுக்க மாட்டா ஆனா பாக்கியா ஏதாவது ஒரு விஷயத்துக்கு மறுத்தாங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு போன் பண்ணி அது நடக்கணும்னு நினைக்கிற இது நான் தப்பு சொல்லல இருந்தாலும் உங்களை தேவைக்கு பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க என்றெல்லாம் பேச என் பசங்க கிட்ட இருந்து என்ன பிடிக்க பாக்குறியா என்று கோபி கேட்கிறார். எல்லாரும் பாக்கியலட்சுமி ஒருநாள் தூக்கி போட்டுட்டு கண்டிப்பா என் கூட வருவாங்க என்று கோபி சொல்ல ராதிகா எனக்கு ஆபீஸ்ல மீட்டிங் நாளைக்கு இருக்கு நான் போய் படுக்கிறேன் குட் நைட் என்ன சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

இனியா பாக்கியாவிடம் குட் நைட் என சொல்ல, பாக்கியா எதுவும் பேசாமல் இருக்கிறார் உடனே இனியா நானே இறங்கி வந்து பேசுவேன் நீ பேசலனா ரொம்ப ஓவர்மா என்று சொல்ல தப்பு நீ பண்ணா நீ தான் இறங்கி வரணும் என்று பாக்கியா சொல்லுகிறார். பாட்டி இடமே நடந்துக்கினது ரொம்ப தப்பு,இப்படி இருக்கிற சூழ்நிலையில் அவர்களுக்கு ஆறுதலா தான் இருக்கணும் என்று பேசுகிறார் சரி நீ எதுக்கு உங்க அப்பாவ பாக்க போன என்று கேட்க டான்ஸ் கம்பெட்டிஷன் விஷயமா பேசறதுக்காக போன ஓகே சொல்லிட்டாரா என்று சொன்ன ஆமாம் என்று இனிய சொல்லுகிறார்.நீ உங்க அப்பாவ பார்க்கிறது நான் வேணான்னு சொல்ல மாட்டேன் ஆனா உன் விஷயத்துல முடிவு எடுக்குற உரிமை அவருக்கு கிடையாது என்று பாக்யா உறுதியாக சொல்லிவிடுகிறார். ஏன் இனியா நீ இவ்வளவு சுயநலவாதியா இருக்க இங்கே ஏதாவது ஒன்னுனா அங்க போயிடுவ அங்க ஏதாவது ஒன்னுனா இங்க வந்துருவியா என்று பாக்யா இனியாவை திட்டுகிறார். உங்க அப்பா சம்மதிச்சுட்டா இதெல்லாம் நடக்கும் என்று நினைக்கிறாயா என்றுதான் பேசிவிட்டு குட் நைட் சொல்லி படுத்து வருகிறார்.

மறுபக்கம் ராதிகாவின் அம்மா வீட்டுக்கு வர முட்டி வலி காரணமாக டாக்டரை பார்க்க வந்தேன். ஒரு அம்மானு கூட பார்க்காமல் என்ன வெளியே அனுப்புன என்றெல்லாம் பேச, அந்த நேரத்துல உன்னால பிரச்சனை இருந்தது அதனால் தான் என்று சொல்ல உனக்கு தெரியாதா சொல்லுகிறார். உடனே கொஞ்சம் சூடா காபி கொடு ராதிகா என்று கேட்க அந்த நேரம் பார்த்து காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கிறது. ராதிகா திறக்க கோபியை பார்த்து ராதிகாவின் அம்மா பயப்படுகிறார். உள்ளே வந்த கோபி எப்ப வந்தீங்க என்று கேட்டு ராதிகாவை உள்ளே கூப்பிடுகிறார். ஏன் எனக்கு முன்னாடியே சொல்லல என்று சொல்லியிருந்தா கூப்பிட்டு இருக்பீங்களா என்று ராதிகா கேட்க அவங்க பண்ணது பெரிய தப்பு தான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா அவங்களுக்கு மூட்டு வலி அதிகமா இருக்கு அவங்க பாக்குற ஹாஸ்பிடல் இங்க இருக்கிறதுனால வந்து இருக்காங்க என்று சொல்ல ரெண்டு நாள் முன்னாடி தான் பிளான் பண்ணோம் என்று சொல்கிறார். இரண்டு நாள் டைம் இருந்தது என்கிட்ட சொல்லி இருக்கலாமே என்று கோபி சொல்லுகிறார். பிறகு ராதிகா கோபியை சமாளித்து மூட்டு வலி சரியானதும் போயிடுவாங்க என்று சொல்லுகிறார் எங்க அம்மாவ பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்று சொல்லுகிறார்.

எழில் வெளியே நின்று பாக்கியலட்சுமி என்று கூப்பிட யார் என்று பாக்யா பார்க்க எழில் வந்து நிற்கிறார். வாடா உள்ள என்று பாக்கியா கூப்பிட, நான் யாருன்னு நெனச்சேன் டா என்று சொல்லுகிறார் என்ன விட்டா யார் உன்னை பாக்கியலட்சுமி உரிமையா கூப்பிடுவா என்று பேசிக் கொண்டிருக்க நான் பாட்டியை போய் பார்த்துட்டு வரேன் என்று சொல்லுகிறார்.

எழில் ஈஸ்வரி இடம் என்ன பேசுகிறார்?அதற்கு ஈஸ்வரியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update
BaakiyaLakshmi Serial Episode Update