Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோர்ட்டுக்கு சென்ற பாக்கியா..வருத்தத்தில் குடும்பத்தினர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு கோபியின் விவாகரத்துக் கொடுக்க கிளம்பி விட்டனர்.

செழியன் மற்றும் ஜெனி இருவரும் ரூமுக்குள் இப்படியெல்லாம் நம்ப குடும்பத்துல நடக்கும் நான் கொஞ்சம் கூட நெனச்சி பாக்கல என பேசிக்கொள்கின்றனர். அப்பா தான் அப்படி பண்ணாருன்னா அம்மா அவசரப்பட்டு கோர்ட்டுக்கு கிளம்பி போயிட்டாங்க என்ன பண்ண போறாங்கன்னு புரியல எனக்கு ரொம்ப பயமா இருக்கு என செழியன் சொல்ல ஜெனி பாட்டியாவுக்கு ஆதரவாக பேசுகிறார். அவங்க இந்த குடும்பத்துக்காக மட்டுமே வாழ்ந்தாங்க அவங்களுக்கு இப்படி ஒரு துரோகம் நடக்கும் போது எப்படி ஒரு வலி இருக்கும் யோசித்துப் பாரு என கூறுகிறார்.

அதன் பிறகு இனியா ஒரு பக்கம் படிக்கட்டில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார். வெளியே வந்த ஜெனி மற்றும் செழியன் இனியாவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய அவர் இனிமேல் நானும் சிங்கிள் பேரண்ட் குழந்தை தானா என அழுகிறார். அம்மா ஏன் இப்படி பண்ணாங்க என்ன பத்தி கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல இவ்வளவு செல்ஃபிஸா இருக்கிறார்கள் என அழுகிறார்.

பாக்யாவிடம் எழில் உனக்கு வருத்தமாக பயமாகவும் இல்லையா என கேட்க முதல் மரியாதை என்னுடைய வாழ்க்கையில என்னை நானே மதித்து ஒரு முடிவு எடுத்து இருக்கேன் எனக்கு பயமும் தயக்கமும் இல்லை என கூறுகிறார். இன்னொரு பக்கம் கோபி எவ்வளவு திமிரு இருந்தா டிவோர்ஸ் தரேன்னு சொல்லுவேன் உனக்கே அவ்வளவு இருக்கும்போது எனக்கு எவ்வளவு இருக்கும் யாருக்கு இதுல நஷ்டம் என கொஞ்சம் கூட யோசிக்கல. டிவேர்ஸ் தானே கொடுக்கிறேன் வாங்கிட்டு ஓடிப்போ என கோபி கூறுகிறார்.

மேலும் இன்னொரு பக்கம் ஈஸ்வரி மற்றும் அவருடைய கணவர் வேணுகோபால் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரி பாக்கியா மீது கோபத்தோடு பேச வேணுகோபால் இதுக்கெல்லாம் கோபி தான் காரணம் என சொல்கிறார். இந்த நேரத்தில் வந்த செல்வி அக்கா இந்த குடும்பம் தான் உலகம் இருந்துச்சு அப்படி இருக்கும் அவளுக்கு பச்சை துரோகம் பண்ணா எப்படி இருக்கும் என பேசுகிறார். ‌‌‌‌‌

பிறகு ஈஸ்வரி உனக்கு அந்த ராதிகா வீடு தெரியுமா வா என்ன கிளம்பி ராதிகா வீட்டிற்கு செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் ராதிகா வீட்டிற்கு போன ஈஸ்வரி என் குடும்பத்தை கலைச்ச நீ நல்லாவே இருக்க மாட்ட என மண்ணை வாரி தூவி சாபம் விடுகிறார்.

 baakiyalakshmi serial episode-update

baakiyalakshmi serial episode-update