தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா டெலிவரி வேலைகளில் பிஸியாக இருக்க ஆனந்திற்கு கோபி போன் பண்ணுகிறார் பிறகு எப்படி போய்க்கிட்டு இருக்கு வேலை என்று கேட்க பக்ரீத் வேலையெல்லாம் போய்கிட்டு இருக்கு சார் என்று சொல்லுகிறார். அப்படியா ரொம்ப சந்தோஷம் என்று சொன்ன பிரச்சனை எப்போ வரும் என்று கேட்கிறாள் இன்னும் கொஞ்ச நேரத்திலேயே வர ஆரம்பிச்சுடும் என்று சொல்லி போனை வைக்கிறார். உடனே கோபி அந்த கண்கொள்ளாத காட்சி நேரில் பார்த்தா எப்படி இருக்கும் என்று சந்தோஷப்பட பாக்யாவிற்கு பிரச்சனை வர ஆரம்பிக்கிறது.
பிரியாணி பக்கெட் உடன் ஒருவர் வந்து இந்த பிரியாணி சாப்பிட்டு என் பொண்ணு வாந்தி எடுத்துக்கிட்டு இருக்கா சிக்கன் 65-ல ஒரே ஸ்மல் அதிகமா இருக்கு என்று ஒரே கம்ப்ளைன்ட் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. அப்படியெல்லாம் இருக்காது என்று அவர்களிடம் பாக்யா புரிய வைத்துக் கொண்டு இருக்க இதனை ஆனந்த் வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருக்கிறார்.
பிறகு ஒவ்வொருவராக வந்து கெட்டுப் போன பிரியாணி என்று பிரியாணியை தூக்கி வீச அதிலிருந்து துர்நாற்றம் அதிகமாக வருகிறது. அதைப் பார்த்து பாக்கிய அதிர்ச்சியாகிறார். சோசியல் மீடியாவில் போடணும் உங்கள ஜெயில்ல புடிச்சு போடணும் என்று மக்கள் ஆவேசமாக பேசுகின்றனர். அவர்களுக்கு புரியும்படி பாக்யா சொல்ல உங்க வீட்ல இருக்கிறவங்களா இருந்தா இப்படி எல்லாம் பண்ணுவீங்களா இது எடுத்துனு போங்க வீட்ல இருக்குறவங்களுக்கு சாப்பிட குடுங்க என்று எல்லாம் பேசுகின்றனர். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஆனந்த் இதை வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணி கோபி சாருக்கு அனுப்பனும் என்று ரெக்கார்ட் போட்டு அனுப்பி கொண்டிருக்க செல்வி அதை கவனித்து விடுகிறார்.
அவரிடம் சென்று இங்கு எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்துக்கிட்டு இருக்கு போன பாத்துட்டு இருக்கீங்க நீங்கதானே காரணம் வந்து சொல்லுங்க என்று சொன்னார் அதுல நம்ப ரெஸ்டாரன்ட் ஓட பிரியாணியா இருக்காது மேடம் அவங்க பொய் சொல்றாங்க என்று மெதுவாக பேச அதையே இங்க மெதுவா பேசிக்கிட்டு இருக்கீங்க சமைச்சா ஆள் நீங்க தானே வந்து அங்க சொல்லுங்க என்று சொல்ல ஆனந்த் வர மறுக்கிறார். பாக்கியா எவ்வளவு சொல்லியும் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே போகிறது.
ஒரு கட்டத்திற்கு மேல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வருகின்றனர்.அவர்கள் வந்து பேச பாக்கியா ஒரு பக்கெட் எடுத்துக் கொடுக்க அதில் சாப்பாடு எதுவும் கெட்டுப் போகாமல் இருக்கிறது ஆனால் மக்கள் எடுத்துக் கொண்டு வந்த பக்கெட்டை காட்டும் போது அதில் இறைச்சி கெட்டு போய் உள்ளது. உடனே பத்திரிக்கையாளர்கள் வர அந்த இடமே பரபரப்பாக காட்சியளிக்கிறது.
பிறகு உணவு துறை அதிகாரிகள் கிச்சனை செக் பண்ண உள்ளே செல்லுகின்றனர். பிறகு வெளியே வந்த பாக்யாவிடம் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டிருக்க கோபி இதனை பார்த்து சந்தோஷமாக ரசித்து கொண்டிருக்கிறார்.
உடனே கூட்டத்தில் ஒருவர் பிரியாணியை வேக வேகமாக வெளியே எடுத்து நடு கடைக்கு நேராக போட்டு உடைக்கிறார். இன்னும் பாக்யா அதிர்ச்சியாகவும் இருக்க பத்திரிக்கையாளர்கள் அதையும் ஒரு நியூஸ் ஆக எடுக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து கோபி மகிழ்ச்சியாகிறார்.
பாக்யா இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்? குடும்பத்தாரின் மனநிலை என்ன என்பதை இன்றைய எபிசோடு பார்த்த தெரிந்து கொள்வோம்.