தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் கல்லூரி பருவ காதலியுடன் மீண்டும் உறவில் இருந்து வருகிறார். அவரை திருமணம் செய்து கொண்டு மனைவியை விவாகரத்து செய்ய ஆசைப்படுகிறார்.
இப்படி அப்பாவி மனைவிக்குத் தெரியாமல் கோபி செய்துவரும் அட்டூழியங்கள் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சீரியல் இதில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவ்வளவுதான் என்பதை மறந்து பலரும் அவரை கண்ட மேனிக்கு திட்டி வருகின்றனர்.
இதனால் கோபி மிகவும் வருத்தத்தோடு அது சீரியல் அதிலும் நடிக்கிறேன் அவ்வளவுதான். நன்றாக நடித்தாலும் திட்டுகிறீர்கள் நடிக்கவில்லை என்றாலும் தீட்டுவீர்கள் என்னுடைய நிலைமையை நினைத்துப் பாருங்கள் என வருத்தத்தோடு பேசியுள்ளார்.
இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது.