தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வருபவர் கோபி. இதற்கு முன்னதாக இவர் பல்வேறு சீரியல்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலில் இவர் நடித்த கோபி கதாபாத்திரம் தான் மிகப்பெரிய உச்சத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலின் மிகப்பெரிய தூணாக சதீஷ் இருந்து வருகிறார். ஒவ்வொரு நாளும் சமூக வலைதள பக்கங்களில் எதையாவது தகவல்களை சொல்லி வரும் கோபி இன்றைய வீடியோவில் தனது நடிப்பு திறமைக்கான ரகசியத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது, நான் நல்லா நடிக்கிறதுக்கு ஒரே காரணம் நீங்க கொடுக்கிற அன்பும் ஆதரவும் தான் யார்கிட்டயும் இத சொல்லிடாதீங்க என தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram