தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் பாக்கியலட்சுமி உட்பட அனைத்து சீரியல்களும் டல் அடிக்க தொடங்கியதால் டிஆர்பியில் அனைத்தும் பின்னடைவை சந்தித்து சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தன.
இப்படியான நிலையில் கடந்த வாரம் பாக்யாவுக்கு கோபி ராதிகாவுடன் பழகி வரும் விஷயங்கள் தெரிந்து சீரியல் சூடு பிடிக்க தொடங்கியது. இதனால் இந்த சீரியல் தற்போது டிஆர்பி-ல் முதல் இடத்தை பிடித்துள்ளது. சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியதில் இருந்து தற்போது வரை முன்னணியில் இருந்து வந்த கயல் சீரியல் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்தை சன் டிவியில் வானத்தைப்போல சீரியல் பிடிக்க நான்காவது இடத்தை சுந்தரி சீரியல் பிடித்துள்ளது.
ஐந்தாவது இடத்தையும் சன் டிவியின் ரோஜா சீரியல் பிடித்துள்ளது. பாக்யாவுக்கு விஷயம் தெரிந்த நிலையில் டி ஆர் பி-ல் விட்ட இடத்தை மீண்டும் பிடித்துள்ளது விஜய் டிவி.