தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நித்திஷ் பற்றிய உண்மைகள் இனியாவின் குடும்பத்தினருக்கு தெரிய வர இனியாவை இந்த வீட்டிலேயே இருக்கட்டும் என முடிவு எடுத்து விடுகின்றனர்.ஆனால் சுதாகர் இனியாவை எப்படியாவது இங்கு கூட்டிட்டு வந்துடனும் என்று திட்டம் போடுகிறார்.
இந்த நிலையில் நித்தீஷ் இனியா வேலை செய்யும் ஆபீசுக்கு சென்று இனியா வந்தே ஆகணும் என்று சொல்ல அதை மறைந்திருந்த இனியா கேட்டு நிற்கிறார்.
பிறகு செக்யூரிட்டி நித்திஷை அழைத்துச் சென்றுவிட ஹோட்டலுக்கு வந்த நிதிஷ் இனியா கையை பிடித்து இழுத்து வந்து ஆகணும் என்று அழைக்க பாக்யா வந்து தடுத்து நிறுத்துகிறார். மறுபக்கம் கோபி எழில் செழியன் என மூவரும் சுதாகர் வீட்டுக்குச் சென்று நித்திஷிடம் இனிமே நீ என் தங்கச்சியை கூப்பிடக்கூடாது என்று சொல்ல அப்படித்தான் நான் கூப்பிடுவேன் என நித்திஷ் சொன்னவுடன் எழில் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார்.
உடனே கோபி பாக்கியாவிடம் வந்து உன்ன என்ன எழில் செழியன் மீது கேஸ் கொடுத்திருக்காங்க விசாரணைக்கு வர சொல்லி இருக்காங்க என்பதை சொல்லுகிறார்.பரபரப்பான திருப்பங்களுடன் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
