தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி என்ற சீரியலில் வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் ரித்திகா.
இந்த சீரியலை தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் முடிந்தது. விஜய் டிவியை சார்ந்த தொழில்நுட்பக் கலைஞர் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஹனிமூன் சென்றுள்ள ரித்திகா அதற்குள் ஹேப்பி நியூஸ் சொல்லியுள்ளார்.
ஆனால் நீங்கள் நினைப்பது போல இது பிரக்னன்சி குறித்த அறிவிப்பு இல்லை. திருமணம் ஆகி அதற்குள் ஒரு மாதம் ஆகிவிட்டதாக சொல்லி முதல் மாத திருமண தினத்தை கொண்டாடியுள்ளார் ரித்திகா.
இன்னும் ரசிகர்கள் வாழ்த்து கூட சொல்லி முடிக்காத நிலையில் அதற்குள் கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆகிவிட்டதா என ரசிகர்கள் ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியல் சூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவர் சீரியலில் இருந்து விலகவில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.
View this post on Instagram